பெட்ரோல் டேங்கில் தண்ணீர் புகுந்தால் என்ன தீர்வு !

மழை காலங்களில் தமிழகத்தின் சில பகுதிகளில் ஊருக்குள் வெள்ளம் வந்து தண்ணீர் தேங்குவது என்பது வாடிக்கை யாகி விட்டது. 


சென்னை வெள்ளம், வர்தா புயல் ஆகிய சம்பவங்களில் போது பலர் தங்கள் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மிகவும் கஷ்டப் பட்டனர்.

பலரது கார், பைக் தண்ணீரில் முழ்கியது. அதில் சில பயன்படாத நிலைக்கே சென்றது.

இனி அவ்வாறான சூழ்நிலை ஏற்பட்டால் கார்களில் தண்ணீர் புகுந்து அது கார் இன்ஜினில் எந்த மாற்றங்களை ஏற்படுத்து கிறது.

அதனால் ஏற்படும் பிரச்னைகள், அறிகுறிகள், அதற்கான தீர்வுகளை நாம் தெரிந்து வைத்து க்கொள்ள வேண்டியது அவசியம். 

அவற்றை பற்றி தான் விவரிக்கிறது இந்த செய்தி

பியூயல் பில்டர்கள்

இன்ஜினு க்குள் தண்ணீர் செல்லாமல் பியூயல் பில்டர் எனும் கருவி தான் தடுக்கும். 


எனினும் அதையும் தாண்டி தண்ணீர் சென்றுள்ளது என்றால் தண்ணீர் அளவு அதிகமாக இருந்திரு க்கும். 

இந்நிலையில் பியூயல் பில்டரும் அதிக அளவு தண்ணீரை உறிஞ்சிரு க்கும். 

இதனால் அதை முதலில் மாற்ற வேண்டும்.

பியூயல் சேர்ப்பான்கள்

பெட்ரோல் டேங்கில் லிக்யூ மோலி, ஹீட், ஹெட்ரோ பெர்ன் ஜி, உள்ளிட்ட பியூயல் சேர்பான்களை சேர்ப்பது மூலம் 


தண்ணீரை பெட்ரோலுடன் கலக்க வைக்க முடியும். இது இன்ஜினுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. 

எனினும் இது குறைந்த அளவு தண்ணீர் இருந்தால் மட்டுமே சாத்தியம்.

ரப்பிங் ஆல்கஹால்

பெட்ரோல் டேங்கிற்குள் ரப்பிங் ஆல்கஹால் எனும் திரவத்தை ஊற்றினால் 

அது தண்ணீருடன் கலந்து இன்ஜினுக்கு சென்று அதுவும் எரி பொருளாக பயன்படும். 

எனினும் அதை சிறந்த மெக்கானிக் மட்டுமே செய்ய முடியும். அவர்களு க்கு தான் அதன் அளவுகள் சரியாக தெரியும்.


பெட்ரோல் டேங்கில் அதிகளவு தண்ணீர் புகுந்தால் ஏற்படும் பிரச்னைகள் பற்றி மட்டுமே மேலே குறிப்பிட் டுள்ளோம். 

சில சொட்டு தண்ணீர் சென்றால் அது பியூயல் பில்லரால் உறிஞ்சப்பட்டு விடும் 
அதையும் மீறி செல்லும் சில சொட்டு தண்ணீர் ஆவியாக்கப் படும் அதை பற்றி நாம் கவலைப்பட தேவை யில்லை.

இந்த தகவல்களை மனதில் வைத்து கொண்டு உள்ள காரில் தண்ணீர் புகுந்ததால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்து 


அதற்கு தகுந்த தீர்வை செய்யுது விடுங்கள் தண்ணீர் புகுந்த விஷயத்தில் 

நீங்கள் அசால்ட்டாக இருந்தால் இன்ஜின் செயல் இழப்பதையும் சந்திக்க வேண்டியது இருக்கும்.
Tags:
Privacy and cookie settings