கர்நாடக மாநிலத்தில் ஒரு கோவிலில் ரேணுகாம்பா ஜாட்ரா எனும் விநோத நிகழ்வு நடக்கும் பழக்கம் உள்ளது.
அதில் ரேணுகாம்பா தேவியின் கோவில் விழாவில் பெண்கள் நிர்வாணமாக பூசை நடத்துவார்கள் என்றும்,
இந்த சமயங்களில் கோவில் விழா களைகட்டும் என்றும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த கோவில் எங்கே உள்ளது, எப்படி செல்லலாம், அருகிலுள்ள ஈர்க்கும் இடங்கள், பூசை நேரம் உள்ளிட்ட பல தகவல்களையும் இந்த பதிவில் காண்போம்.
எங்கே உள்ளது
கர்நாடக மாநிலத்தின் ஷிவமோகா மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த கோவில்.
சித்தாப்பூர் என்று அழைக்கப்படும் இந்த பகுதியில் பல கிராமங்கள் அருகருகே அமைந்து இந்த கோவிலின் அமைவிடமாக இருக்கிறது. சாரப் வட்டத்தில் இந்த கோவில் இருக்கும் ஊர் அமைந்துள்ளது.
குகைக் கோவில்
இந்த கோவில் குகைக் கோவில் வகையைச் சேர்ந்தது ஆகும். ரேணுகாம்பா தேவி கோவில் அல்லது ரேணுகாம்பா கோவில் என்று இந்த கோவில் அழைக்கப் படுகிறது.
இங்கு பலரும் அதிசயிக்கும் வண்ணம் விசித்திரமான வகையில் திருவிழா கொண்டாடப் படுகிறது.
நிர்வாண திருவிழா
இந்த கோவிலில் நடத்தப்படும் கொடைவிழா சுற்றுப் பகுதி மக்களை ஒரு வித ஆச்சர்யத்துடன்
அமானுஷ்ய வகை பயத்தை ஏற்படுத்தும் விதத்தில் இருக்கிறது என்று சொன்னால் மிகை ஆகாது.
உள்ளூர் காரர்களைத் தவிர்த்து மற்றவர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டால், நிச்சயம் அவர்களுக்கு மரண பயத்தை பார்த்து விட்டு வர நேரிடும்.
மரணத்தின் விளிம்பு
இரவு நேரங்களில் நடக்கும் இந்த விசித்திரமான பூசைகளில் வெளி ஊர் காரர்கள் கலந்துகொள்ள அவ்வளவாக அனுமதிக்கப் படுவதில்லை.
ஆனால் பெரிய அளவில் கட்டுப்பாடு இல்லை என்பதால் சுற்றுலாப் பயணிகள் இதில் கலந்து கொள்கிறார்கள்.
சில சமயங்களில் இங்கு நடப்பவை அவர்களின் கற்பனைக்கு அப்பால் இருப்பதாலேயே மயங்கிய நிலைக்கு செல்கிறார்கள். அது இன்னும் விசித்திர மானதாகவே இருக்கிறது.
ஆதி கால பண்பாடு
இந்த கோவிலில் பூசை செய்யும் விசித்திரமான நிகழ்வுகள் தவிர்த்து, வருடம் ஒரு முறை கொண்டாடப்படும் திருவிழா வின் போதும் பல ஆச்சர்ய நிகழ்வுகள் நடத்தப் படுகின்றன.
சடங்கு முறை
1984 வரை நிகழ்த்தப்பட்டு வந்த சடங்கு முறை ஒன்றில் பெண்கள் அங்குள்ள குளத்தில் பிறந்த மேனிக்கு குளித்து விட்டு அப்படியே பூசையில் கலந்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது.
கட்டுப்பாடுகள் நிறைந்த விநோத வழிபாடு
இப்போதும் சில சமயங்களில் அதுமாதிரியான விநோத வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன என்றாலும், அந்த ஆண்டு வரை அது மிகக் கட்டுப்பாடோடு நடத்தப்பட்டது.
நிச்சயம் பெண்கள் அதில் கலந்து கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது.
காட்டுமிரான்டித் தனம்
இது மலைப்பகுதி என்பதாலும், அங்கு வாழ்ந்தவர்கள் தங்கள் பண்பாட்டை காக்க வேண்டும் என்று கூறியும் பல வருடங்களாக இதைத் தொடர்ந்து வருகின்றனர்.
நிர்வாண வழிபாடு நிகழ்த்தாமல் இந்த திருவிழா முழுமை பெறாது என்றும் கூறுகின்றனர்.
ஜாத்ரா
நிர்வாண ஜாத்ரா என்று அழைக்கப்படும் இந்த விநோத வழிபாட்டில் பெண்களே அதிக அளவில் கலந்து கொள்கிறார்கள்.
உடைகளின்றி வெற்றுடலில் ரேணுகாம்பாவை தரிசித்தால், ஊரில் மழை ஊத்தி எடுக்கும் என்பது தொன்னம்பிக்கை.
மழை
அவர்கள் கூறிய படியே அந்தவிழா முடிவில் மழையும் வருகிறது. ஒரு முறை இருமுறை அல்ல எதேச்சையாகவும் நிகழ்வதல்ல..
கிட்டத்தட்ட எல்லா வருடங்களுமே இந்த மழை வருகிறது என்கிறார்கள் அந்த ஊர் பக்தர்கள்.
ஆனால் அவர்கள் அறியாமையில் இருக்கிறார்கள். இந்த விழாவே மழையை வரவேற்கத்தான்.
மழை வரும் நேரத்தை சரியாக கணித்து முன்னோர்கள் இந்த விழாவை கொண்டாடி யிருப்பதாக இதை எதிர்தரப்பினர் கூறுகிறார்கள்.
தடை
இந்த கோவில் விழாவில் நிர்வாண வழிபாட்டுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது,. எனினும் இது அவ்வப்போது நடந்து தான் வருகிறது என்கிறார்கள் இதை எதிர்ப்பவர்கள்.
ஆதி காலத்தில் மனிதன் இலை தழைகளுடன் வாழ்ந்த போது இந்த விநோத வழிபாட்டை கடைபிடித்தான் என்பதற்காக இப்போது இதே முறையை கொண்டாடுவது சிறந்ததல்ல என்கிறார்கள் இவர்கள்.
சந்தரகிரி கோட்டையும் மலையும்
இந்த கோவிலி லிருந்து 1.5 கிமீ தொலைவில் இருக்கு சந்தரகிரி கோட்டையும், இந்த கோவில் அமைந்துள்ள சந்திரகிரி மலையின் அழகையும் ரசிக்க வேண்டும்.
கோட்டைச் சுற்றுலா
43 கிமீ தொலைவில் கானூர் கோட்டை அமைந்துள்ளது. 64 கிமீ தொலைவில் அமைந்துள்ள பங்காப்பூர் கோட்டை மிகவும் சிறப்பு வாய்ந்தது.
சற்று தொலைவில் இருக்கும் சுற்றுலாத் தளங்கள்
இங்கிருந்து 131 கிமீ தூரத்தில் இருக்கும் தம்பால் மற்றும் 134 கிமீ தொலைவில் இருக்கும் லக்குன்டி ஆகிய தலங்களும் சுற்றுலாப் பிரியர்களின் விருப்ப மாகும்.
இந்த கோவிலில் இருந்து பெலகாவி 166 கிமீ தொலைவிலும், பாதாமி 184 கிமீ தொலைவி லும், அய்ஹோல் 203 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளன.
சிறப்பம்சங்கள்
இந்த பகுதி சாகருக்கு அருகிலுள்ள அழகான அமைதியான இடம் ஆகும். நகரத்தி லிருந்து தப்பித்து ஓடுவதற்கு ஏற்ற இடம்.
கோவிலுக்கு பின்புறம் இருக்கும் கல்லில் உட்கார்ந்து இயற்கையை ரசிப்பது மிகவும் சிறப்பானதாக இருக்கும்.
குகையில் கலை
மலை உயரத்தில் அமைந்துள்ள செதுக்கப்பட்ட குகைக் கோவில் வகையைச் சேர்ந்தது இந்த சந்திரகிரி கோவில் ஆகும்.
இது 1398ம் ஆண்டு களிலேயே கட்டப் பட்டதாகும். இது இன்றும் உள்ளூர் பக்தர்களால் பூசிக்கப்படும் தளமாகவே உள்ளது.
விழாக்கால கூட்டம்
சில சமயங்களில் இந்த கோவிலுக்கு அதிகப்படியான கூட்டம் வந்து சேரும். அப்போ தெல்லாம் நீங்கள் கோவிலுக்குள் நுழைவதை கற்பனையிலும் செய்ய முடியாது.
அல்லது அதிக நேரம் காத்திருந்து செல்லலாம். அதுவரை இயற்கை அழகை ரசிக்கலாம். கோவிலுக்கு மேல் ஏறி தென்றல் காற்றை பெறலாம்.
அதிகம் கேள்விப்படாத தளம்
இந்த கோவிலுக்கு அதிகம் பேர் வந்தாலும், இந்த சுற்றுலாத் தளம் அதிகம் பேரால் அறியப்படாத இடமாகவே இருக்கிறது.
நீங்கள் இங்கு சுற்றுலாவுக்கு வந்தால் நிச்சயம் நல்ல பொழுது அமையும். மேலும் மன நிம்மதியுடன் வீடு திரும்பலாம்.
மனைவி, குழந்தைகள், நண்பர்கள் அல்லது காதலியுடன் வருகை தந்து இந்த இடத்தின் அழகை ரசித்து விட்டு செல்லுங்கள்.
Thanks for Your Comments