கொழுப்பில் நல்ல கொழுப்பு கெட்ட கொழுப்பு என்று 2 வகை உண்டு. நல்ல கொழுப்பு அதிகமாகவும் கெட்ட கொழுப்பு குறைவாகவும் இருந்தா தான் உடலுக்கு நல்லது.
நல்ல கொழுப்பை HDL என்றும் கெட்ட கொழுப்பை LDL என்றும் சொல்வார்கள்.
HDL ஐ ஏன் நல்ல கொழுப்புன்னு சொல்றாங்க?
ஹெச்.டி.எல். கொழுப்பு ஒரு போலீஸ்காரரைப் போல் செயல்பட்டு ரத்தக் குழாய்களில் ஆங்காங்கே படிந்த கெட்ட கொழுப்பை
(இதை low-density lipoprotein - LDL என்கிறார்கள்) கல்லீரலுக்கு இழுத்து வந்து பித்த நீர் வழியாக வெளியேற்றி விடுகிறது.
அதனால் இரத்தக் குழாயில் கொழுப்பு படிமம் உருவாவது மட்டு படுத்தப்படுகிறது. பொதுவாக ஹெச்.டி.எல். கொழுப்பு 35 மில்லி கிராமுக்குக் கீழே இருப்பது உடலுக்கு நல்லதல்ல.
அதனால் இதயத்திலிருந்து வெளி செல்லும் இரத்தம் தடைபடாமல் செல்ல வழி செய்து மாரடைப்பு வராமல் நம்மை பாதுகாக்கிறது. HDL குறைவா இருந்தா ஆபத்து.
நல்ல கொழுப்பை அதிகரிக்க வேண்டுமென்றால் முடிந்தவரை மாமிச உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
முட்டையின் மஞ்சள் கரு, கோழிக்கறியின் தோல், மூளை, ஈரல் முதலியவற்றைச் சாப்பிடக் கூடாது. நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
Thanks for Your Comments