அமெரிக்கா வில் செல்ல பிராணி களுக்கு, அதிக மவுசு உண்டு. பெரும் பாலானோர்
வீடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட செல்ல பிராணி களை வளர்ப்பார்கள்.
இதற்கு அமெரிக்க அதிபர்கள் வரை விதிவிலக் கல்ல. பல அமெரிக்க அதிபர்கள்,
தங்களின் வெளிநாட்டு பயணித்தின் போதும் தங்களுடன், நாய் உள்ளிட்ட
செல்லப் பிராணியை அழைத்துச் செல்வதை வழக்க மாகக் கொண் டுள்ளனர்.
இதே நாட்டில் தான், யாரும் பார்த்திராத இந்தக் கொடுமை யான சம்பவமும் நடந்துள்ளது.
அமெரிக்கா வின் தெற்கு கரோலினா பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் இருந்து
செல்ல பிராணி களைப் பாதுகாக்கும் அமைப்பான `நோஹ் ஆர்க்ஸ்’ அமைப்புக்கு ஒரு ஃபோன் கால் வருகிறது.
அதில் பேசியவர் சொன்ன தகவல், அவர்களை அதிர வைத்தது. தங்களின் அடுத்த வீட்டில் உள்ள
ஒரு நாய், கட்டப்பட்ட நிலையில் உள்ளது. அந்த நாய் பசியால் தனது காலை கடித்து உண்ணுகிறது என அந்த நபர் தெரிவித் துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, உடனடி யாக அந்த அமைப்பினர் அங்கு விரைந்தனர்.
அவர்கள் அங்குச் சென்ற போது, அந்த நாய், தனது காலை பாதிக்கும் மேல் கடித்து உண்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடி யாக, அதற்கு உணவளித்து அங்கிருந்து மீட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் கூறுகை யில்,
``எங்களு க்குத் தகவல் கிடைத்து, அங்குச் செல்லும் போது, அந்த நாயின் பாதி காலைக் காண வில்லை.
அதன் அருகில் தண்ணியோ, உணவோ இல்லை. அது பரிதாபமான நிலையில் இருந்தது.
அதன் பசி அதன் உடம்பில் தெரிந்தது. எத்தனை நாள்களாகச் சாப்பிடாமல் இருந்தது எனச் சரியாக சொல்லத் தெரிய வில்லை.
எலும்பு வரை கடித்திருந் ததால், கடுமை யாகப் பாதிக்கப் பட்டிருந்தது.
அறுவை சிகிச்சை மூலம் தற்போது பாதிக்கப் பட்ட கால் அகற்றப் பட்டுள்ளது.
தற்போது அந்த நாய் நல்ல உடல் நலத்துடன் உள்ளது.
எங்களது சேவையில் பல மாதிரியான அனுபவங் களைச் சந்தித்தி ருக்கிறோம்.
பசி காரணமாக ஒல்லி யாகக் குச்சி போன்று இருக்கும் நாய்கள் பலவற்றை மீட்டுள்ளோம்.
ஆனால், இப்படி ஒரு கொடுமையை, சமீப ஆண்டு களில் பார்க்க வில்லை” என்றார்.
தற்போது அந்த நாய், தனது காயத்தில் இருந்து மீண்டு வருகிறது. அங்கு இருக்கும் மற்ற நாய்களுடன்
அது கொஞ்சி விளையாடி வருவதாக, அந்த அமைப்பினர் தங்களது முகநூல் பக்கத்தில் தெரிவித் துள்ளனர்.
லூசி ஃபையர் என்ற இந்த நாயின் உரிமை யாளர்க ளான ஜெசிக்கா ஜேம்ஸ் மற்றும் க்ராஃப்ட்
ஆகியொர் மீது விலங்குகளை கொடுமைப் படுத்துதல் பிரிவின் கீழ் வழக்கு தொடரப் பட்டுள்ளது.
Thanks for Your Comments