பிரதமர் மோடி நல்லது செய்ய நினைக்கிறார் - நடிகர் ரஜினிகாந்த் !

0
நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பயண அறிவிப்பை கடந்த ஆண்டு இதே டிசம்பர் மாதத்தில் அதிகாரப் பூர்வமாக அறிவித்தார். 


இந்நிலையில், ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

தமிழர்கள் கடின உழைப்பாளிகள், அறிவார்ந்த மக்கள். ஆனால், தாங்கள் யார் என்பதை அவர்கள் தற்போது மறந்து போயிருக்கின் றனர்.

நல்ல தலைமை தான் தமிழகத்தின் தற் போதைய தேவை. இங்கு தலைமைக் கான வெற்றிடம் இருக்கிறது. 

மக்களி டம் இருந்து வாக்குகளை மட்டும் பெறுவதை நோக்கமாக கொள்ளாமல், அவர்களுக்கு தேவை யானது என்ன என்பதை தெளிவு படுத்த வேண்டும்.

நான் ஒருபோதும் அரசியலையும், சினிமாவையும் இணைத்துப் பார்க்க நினைத்தது இல்லை. 

அரசியல் வேறு, சினிமா வேறு. சினிமா என்பது பொழுதுபோக்கு மட்டுமே. பொழுது போக்குக்கான விஷயத்தில் அரசியலைக் கொண்டுவரக் கூடாது. 

எனது சில படங்களில் அரசியல் சார்ந்த வசனங்கள் வைக்கப் பட்டது கூட வேண்டு மென்றே செய்யப் பட்டது அல்ல.

எம்ஜிஆர் மிகச்சிறந்த அரசியல் தலைவர். சினிமா நடிகர்கள் அரசியலில் வெற்றி பெற்று மக்களுக்கு உதவ முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர். 

சினிமாவில் இருந்து அரசியலுக்கு வர நினைக்கும் அனைவருக்கும் அவர் ஒரு முன்மாதிரி. 


அதே போலதான் ஜெயலலிதா வும். அவர் மிகவும் உறுதியான பெண்மணி. 

அவரது தன்னம்பிக்கை, உறுதியை பாராட்டியே ஆகவேண்டும். ஆண்கள் நிறைந்த அரசியல் உலகில் தனித்து நின்றவர்.

கமல்ஹாசனை எனது அரசியல் போட்டியாக கருதவில்லை. அவர் ஒரு நல்ல நண்பர், சக நடிகர். இப்போதும் எனக்கு நெருங்கிய நண்பராகவே இருக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு நல்லது செய்ய நினைக்கிறார். 

அதற்காகவே கடினமாக முயற்சித்து பல்வேறு செயல்களை செய்கிறார். மக்களுக்கு சிறந்த வற்றை கொடுக்க முயற்சிக்கிறார்.

நான் இன்னும் முழுமையாக அரசியல் பணிகளில் ஈடுபட வில்லை. 

அரசியலுக்கு வந்தால் தனித்துவமாக, மாற்று அரசியலை உருவாக்க விரும்புகிறேன். 

அதெல்லாம் இல்லா விட்டால் ரஜினிகாந்த் எதற்காக அரசியலுக்கு வரவேண்டும். 


அதே சமயம், அரசியல் என்பது மிகவும் சவாலான ஒன்று. அது மலர்கள் நிறைந்த பாதை அல்ல. 

ஆபத்தான விளையாட்டு, நாடகம் நிறைந்தது. அதில் கவனத்துடன் விளையாட வேண்டும். அரசியலில் நேரம் மிக முக்கியமானது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings