வயிற்றெரிச்சல் வர காரணம் சரக்கு... பிரியாணி... சிகரெட் இது போதும் !

உணவு செரிமானம் ஆவதற்கு தேவையான அமிலம், வயிற்றையும் வாயையும் இணைக்கும், 'ஈசோபாகஸ்' எனும் பகுதியில் படரும் போது, புளிப்பு தன்மை யுடன் எரிச்சல் ஏற்படும்; 


நாளடைவில் புண்ணாக மாறும். இரைப்பை யில் காணப்படும் 'ஹைட்ரோ குளோரிக்' அமிலம், உணவுக் குழாய்க்குள் நுழைவதால் ஏற்படும் விளைவு தான், நெஞ்சு எரிச்சல்.

மது, சிகரெட், ஸ்வீட், சாக்லெட் ஆகியவை தான் வயிற்றெரிச் சலுக்கு மூலக் காரணிகள். 

வயிறு புடைக்க சாப்பிடுதல், வான்கோழி போல் மின்னல் வேகத்தில் சாப்பிடுதல், சரியாக மென்று தின்னாமல் அள்ளி விடுவது போன்ற செயல்கள் தான், வயிற்றில் எரிச்சலை கிளப்பி விடுகிறது.

மேலும், சரிவர சமைக்காத, வேகாத உணவுகளை உண்ணுத லும், இந்த பிரச்னைக்கு முக்கிய காரணம். 

இந்த உணவுகளால், சாப்பாட்டு க்கு பின் வயிற்றில் அமிலங்கள் அதிகமாக சுரப்பதால், இந்த பிரச்னை ஏற்படுகிறது. சாப்பிட்டதும், பலருக்கு நெஞ்சில் எரிச்சல் ஏற்படுவது வழக்கம். 


30 முதல், 50 சதவீதம் பேருக்கு, இந்த பாதிப்பு இருப்பதா கவும், நூற்றில், 20 பேருக்கு,  இது அன்றாடப் பிரச்னை என்றும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. அடிக்கடி நெஞ்சில் எரிச்சல் உள்ளவர்கள்,

'எண்டோஸ்கோப் மற்றும் இ.சி.ஜி.இ.,' பரிசோதனை செய்து கொண்டால், காரணம் தெரிந்து விடும். ஆரம்ப நிலையில் எளிதில் குணப்படுத்தி விடலாம்.

தடுக்க சில வழிகள்

* இந்த பிரச்னை உள்ளவர்கள், மூன்று வேளை உண்பதை தவிர்த்து, சிறு சிறு அளவில், அவ்வப்போது உணவை உட்கொள்ள லாம்.

* 'காம்ப்ளக்ஸ் கார்போ ஹைட்ரேட்ஸ்' அதிகம் உள்ள அரிசி மற்றும் ரொட்டிகளை உணவில் சேர்த்து கொள்ளலாம். அதற்காக, அதிகமாக உண்ணக் கூடாது.

* டீ, காபி, பீர், ஒயின் போன்றவை அமிலம் சுரப்பதை தூண்டுவ தால், இவற்றை அதிகம் குடிக்க கூடாது. தூங்கும் முன் பால் குடிப்பது கூட, அமிலச் சுரப்பை அதிகப்படும். வாசனை நிறைந்த உணவையும், வறுத்த உணவு களையும் தவிர்க்க வேண்டும்.


* சாப்பிட்டதும் படுக்கக் கூடாது. உணவுடன் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது. அதில் உள்ள சுக்ரோஸ், பிரக்டோஸ், குளுக்கோஸ் மற்றும் நார்ச் சத்துக்கள், இந்த பாதிப்பை குறைக்கிறது.

* சாப்பிட்ட பின் வாயில் புளிப்பு தன்மை ஏற்பட்டால், அதிக அமிலம் சுரந்திருப்பது தான் காரணம். இதனால், ஈசோபாகஸில் புற்றுநோய் கூட ஏற்படலாம்.

* மசாலா, எண்ணெய், கொழுப்பு நிறைந்த, புளிப்பேறிய உணவு களைக் குறைத்துக் கொள்வதே சிறந்த மருந்து.
Tags:
Privacy and cookie settings