அறுவை சிகிச்சையைத் தாங்கும் தகுதியுடன் ஒருவரது உடல் இருக்கிறதா என கண்டறியப்பட்ட பின்னரே, தண்டுவட அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் படும்.
காரணம், போதிய உடல் தகுதி இல்லாத வர்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் போது பிரச்னை விலகாது.
மேலும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவர்கள் சொல்லும் ஆலோசனைகளை பின்பற்றாமல் போவதால்,
அந்த அறுவை சிகிச்சை பலனற்றதாகி, மீண்டும் பிரச்னைகள் ஏற்படும் நிலையையும் அவர்களே உண்டாக்கிக் கொள்கிறார்கள்.
சரியான நேரத்தில், சரியான முறையில் சிகிச்சை எடுக்காமல் காலம் கடத்தி, பிரச்னை தீவிரமடைந்த பிறகு அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் போது, மீண்டும் வலி வர வாய்ப்புள்ளது.
பத்தாயிரம் பேரில் ஒருவரால் நடக்க முடியாமல் போகலாம். நரம்புத் தளர்ச்சி, கிருமி பாதிப்பு, வலி கூடுவது, நடப்பதில் சிக்கல் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
எவ்வளவு செலவாகும்?
எம்ஆர்ஐ ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனை களுக்கு ரூபாய் 3 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை.
ஆரம்பகட்ட பிரச்னைக்கு மருந்து, மாத்திரை சிகிசைக்கு சில ஆயிரங்கள் போதும்.
நவீன மருத்துவ முறைப்படி ஊசி மூலமாக தீர்வு காண ரூபாய் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை.
அறுவை சிகிச்சைக்கு பாதிப்பை பொறுத்து 50 ஆயிரம் முதல் 3.5 லட்சம் ரூபாய் வரை.
இதை பல மருத்துவ மனைகளில் அரசு வழங்கும் காப்பீடு திட்டத்தின் மூலம் இலவசமாகவும், குறைந்த செலவுடனும் செய்து கொள்ளலாம்.
குறிப்பு: மேலே சொன்ன கட்டணங்கள் மருத்துவ மனைகள் மற்றும் ஊர்களுக்கு ஏற்ப மாறுபடலாம்.
Thanks for Your Comments