சம்மர் சீசனில் அனைவரும் முடிவெடுக்கும் முதல் விஷயம் நீச்சல் பயிற்சி செல்வது தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கோடைப் பயிற்சி என்கிற பெயரில் நீச்சல் பயிற்சி வகுப்புகளில் குவிவார்கள்.
சிலர் ஒய் எம் சி ஏ, மெரினா போன்ற அரசாங்க நீச்சல் தொட்டிகளில் ஆசைக்காகக் குளித்து விளை யாடுவார்கள்.
அனைவரும் குளிக்கும் அந்த நீர் உடலுக்கு ஆபத்து இல்லையா? அதில் சேர்க்கப்படும் அதிகப் படியான குளோரின் உடலுக்கு நல்லதா? இப்படி பல கேள்விகள் எழுகின்றன.
உங்களுக்கும் இந்த கேள்வி எழுந்தால் அந்த கேள்விகளுக் கான தீர்வை அறிய இதுவே சரியான நேரம். நிச்சயம் அதனால் பல பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்.
இது குறித்து பல ஆய்வுக் கட்டுரைகளும் இருக்கின்றன. பலரும் அடுத்தடுத்து ஸ்விம்மிங் பூல் பயன்படுத்துவதால் மனிதத் தொற்றுகள் ஏற்படாமல் இருக்க குளோரின் அதிகமாகச் சேர்க்கப்படுகிறது.
அந்த அதிகப் படியான குளோரினால் வயிற்றுப் போக்கு, வயிறு வலி, சரும பாதிப்புகள், சரும அரிப்பு போன்ற உடல் உபாதைகள் ஏற்படும்.
இந்த உடல் உபாதைகள் குளோரின் மட்டுமல்லாது செயற்கை யாகத் தேக்கி வைக்கப்படும் தொட்டி நீராலும் இந்தப் பிரச்னைகள் வரும் என உலக சுகாதார அமைச்சகமே எச்சரிக்கிறது.
மேலும் இதனால் கண்கள், காதுகள், தொண்டை தொற்று போன்ற பிரச்னைகளும் வரும் என்று குறிப்பிடுகிறது.
இந்த நீர் வாய்க்குள் செல்வதால் தான் வயிற்றுக் கோளாறுகள் ஏற்படுகின்றன என மருத்துவர்களும் கருத்து தெரிவிக் கின்றனர். மேலும் இதில் சில குழந்தைகள் சிறுநீர் கழிக்கவும் வாய்ப்பு இருப்பதால் அதுவும் உடலுக்கு நல்லதல்ல.
இவை தவிர கடுமையான நோய்த் தொற்றுகளும் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. நோரோ வைரஸ், இ.கோலி, லஸியோனெல்லா போன்ற வைரஸ் தாக்கி அதனால் நோய்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றன.
சுகாதாரமான நீச்சல் குளங்களை தேர்வு செய்து பயிற்சி மேற்கொள்வது நல்லது என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
Thanks for Your Comments