விக்கெட் கீப்பர்களுக்கு நடக்கும் சோகம்... விரல் போன கதை !

0
உலகக் கோப்பை தொடர் பரபரப்பாக நடந்து வருகிறது. கிரிக்கெட் விளையாட்டில் முக்கியமான அங்கம் விக்கெட் கீப்பிங் பணி. 
விக்கெட் கீப்பர்களுக்கு நடக்கும் சோகம்... விரல் போன கதை !
எப்படி பந்து வீச்சாளர்களுக்கு பேட்ஸ்மேன்களை அவுட் ஆக்கும் வாய்ப்பு கிடைக்கிறதோ அதே போலவே 
கீப்பர்களுக்கும் ஸ்டம்பிங் வழியாக விக்கெட்டை பறிக்கும் உரிமை இருக்கிறது. கேட்ச், ரன்அவுட் செய்வது தனி. 

அதனால், ஒவ்வொரு அணியிலும் விக்கெட் கீப்பர்களின் பங்களிப்பு சிறப்பாக இருந்தால் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும். 

பெரும்பாலான விக்கெட் கீப்பர்களின் கைகளை உற்றுக் கவனித்தால் ஏதாவது ஒரு விரல் கண்டிப்பாக கோணலாகி இருக்கும். 

நம்ம தோனியின் விரல்களில் ஒன்று கூட கோணலாகித் தான் இருக்கும். 

கையுறை போட்டிருந்தாலும் பந்து சற்று பிசகலாக விரல்களில் பட்டால் போதும் விரல்கள் வளைந்து விட வாய்ப்பு உண்டு. 
வேகப்பந்து வீசும் போது கீப்பர்கள் மிகுந்த கவனத்துடன் பந்தைப் பிடிக்க வேண்டும். 

விக்கெட் கீப்பிங் பணியால் 10 விரல்களும் கோணலாகிப் போனதும் உண்டு. 
இங்கிலாந்தைச் சேர்ந்த டேவிட் மோரிசன் வடக்கு யார்க் ஷயர் நகரில் உள்ள பிரைடன் கிளப்புக் காகக் கிட்டத்தட்ட 45 ஆண்டுக் காலம் விளையாடியுள்ளார். 

கிரிக்கெட் உலகிலேயே இவரைப் போல வேறு எந்த விக்கெட் கீப்பரும் பாதிக்கப் பட்டதில்லை.

விக்கெட் கீப்பிங் பணியின்போது மோரிசன் விரல்களில் காயமடைந்தால், முறையாகச் சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை. 

விளைவு விரல்கள் கோணலாகிப் போயின. அணியின் தன் இடம் பறிபோய் விடுமோ என்கிற பயமே மோரிசனை சிகிச்சை எடுக்க விடாமல் தடுத்துள்ளது. 
தொடர்ச்சியாக நடைபெற்ற ஆட்டங்கள் மற்றொரு காரணம். 

 டாக்க்ஷி ஓட்டுநராக இருந்து கிரிக்கெட்டராக மாறிய மோரிசன் 2002-ம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார்.

கிரிக்கெட்டுக்கு விடை கொடுத்த பிறகு தான் அவரால் விரல்கள் குறித்து யோசிக்க முடிந்தது. 
விரல்கள் இப்படியாகி விட்டது என்கிற கவலை எல்லாம் இல்லை. இப்போதும் என் விரல்கள் செயல்படுகின்றன என்கிற திருப்தி எனக்கு இருக்கிறது. 

ஆனால், செல்கிற இடமெல்லாம் என் விரல்களையே பலரும் உற்று நோக்குவார்கள் என்கிறார். 
மருத்துவர்கள் மோரிசனின் விரல்களைப் பரிசோதித்து பார்த்து விட்டு, இனிமேல் ஒன்றும் செய்ய முடியாது என்று கை விரித்து விட்டனர். 

டேவிட் மோரிசனின் இரு மகன்களும் கூட கிரிக்கெட்டர்களே!
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings