திருச்சியில் நவீன வசதிகளுடன் கூடிய கழிவறை திறப்பு !

0
திருச்சியில் பெண்களுக் கான நவீன சுகாதார மைய வளாகம் அமைக்கப் பட்டுள்ளது. இந்த நவீன சுகாதார மையம் ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரனால் திறந்து வைக்கப் பட்டது.
திருச்சியில் நவீன வசதிகளுடன் கூடிய கழிவறை திறப்பு
இந்த சுகாதார வளாகத்தில் 24 மணி நேரமும் ஒரு ரூபாய்க்கு ஒரு லிட்டர் சுத்தமான குடிநீர் வசதியும், அதன் அருகிலேயே ஏடிஎம் இயந்திரமும் உள்ளது. 



முக்கியமாக பெண்களுக் கான பிரத்தியேக மாக சென்சார் மூலம் இயங்கும் கதவுகளை கொண்டும் மின் விளக்குகள் கொண்டும் கழிப்பறைகள் பொருத்தப் பட்டுள்ளன. பெண்கள் கழிவறைக்கு செல்லும் போது மட்டும் கதவு தானாக திறந்து மூடும். 
பெண்கள் கழிவறைக்கு செல்லும் போது
அதே போல மின் விளக்குகளும் தானாகவே கதவு திறந்தவுடன் எரியும். கழிவறையின் உள்ளே மின்விசிறி பொருத்தப் பட்டுள்ளது. இது மட்டுமல்லாது குழந்தை களுக்கான பிரத்யேக அறைகளும் இடம் பெற்றுள்ளன.
ஆட்டு இறைச்சி வாங்கும் போது கவனிக்க வேண்டியது !
மின் விளக்குகளும் தானாகவே எரியும்



அதாவது, தாய்மார்கள் கழிப்பறைக்கு செல்லும் போது தங்களது குழந்தைகளை பத்திரமாக மற்றொரு அறையில் அமர வைப்பதற்கான இடமும், பெண்கள் கழிப்பறைக்கு சென்று வருவதற்கான ஏற்பாடும் செய்யப் பட்டுள்ளன.
கழிப்பறைக்கு செல்லும் போது
கழிவறையைப் பயன்படுத்திய பிறகு கிருமி நாசினி மருந்துகள் கொண்டும் கைகளை கழுவதற்கான பிரத்தியேக வசதிகளும் செய்யப் பட்டுள்ளன. ஐந்து ரூபாய் கட்டணம் செலுத்தி நாப்கின் பெற்றுக் கொள்ளும் இயந்திரம் இந்தக் கழிவறை யில் இடம் பெற்றுள்ளது.
கிருமி நாசினி மருந்துகள்
இந்த வளாகத்தில் 5 ரூபாய்க்கு நாப்கின் கிடைக்கும் எந்திரமும் இருக்கிறது. பயன்படுத்திய நாப்கின்களை சுகாதார முறையில் மின்சார வசதியுடன் சாம்பலாக மாற்றும் இன்சுலேட்டர் எந்திரமும் இதில் பொருத்தப் பட்டுள்ளது, இதன் சிறப்பு அம்சமாகும்.
இன்ஸ்டாகிராமில் கண் தெரியாத பூனைக்கு கிடைத்த ராஜ வாழ்க்கை !
5 ரூபாய்க்கு நாப்கின்



இதே வளாகத்தில் மகளிருக்கான மருத்துவ ஆலோசனை களும், மாதவிடாய் சுகாதார மேலாண்மை பரிசோதனை களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் ஹெல்த் கிளினிக்கும் அமைந்துள்ளது.

இந்தக் கழிவறைகள் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. திருச்சி மாநகராட்சியில் முதல் முறையாக நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறைகள் திறக்கப் பட்டுள்ளன. 
ஹெல்த் கிளினிக்
தொடர்ந்து ஆண்களுக் கான கழிப்பறையும் பல்வேறு இடங்களில் தேவைக்கேற்ப பெண்களுக் கான கழிப்பறையும் திறந்து வைக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

இந்த நவீன கழிவறை பெண்களுக்கு பயனுள்ள தாகவும் பாதுகாப்பான தாகவும் இருக்கும். இதைப் பயன்படுத்தும் அனைவரும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
முதியவர்கள் சாப்பிட வேண்டிய சத்தான உணவுகள் !
பெண்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்
ஒரே இடத்தில் பெண்களுக் கான கழிவறை, குழந்தைகள் பராமரிப்புடன் கூடிய கழிவறை, சிறுமியர் கழிவறை, நாப்கின் எரிப்பான், தானியாங்கி நாப்கின் விற்பனை கருவி, கை உலர்த்தி,

சுத்திகரிக்கபட்ட குடிநீர், பணம் எடுக்கும் இயந்திரம், நவீன பரிசோதனை மையம் அமைந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings