மலச்சிக்கலால் இந்த பெண்ணுக்கு 10 வருஷம் மறந்து போச்சாம் - அடப்பாவமே !

0
பல்வேறு உடல் நல கோளாறு களின் காரணமாக கொஞ்ச நேரம் எல்லாம் மறந்து போனது போன்ற உணர்வு ஏற்படும். 

குறுகிய கால மறதி பிரச்னைக் கான காரணங்களை புரிந்து கொள்வது கடினமான ஒன்று. 

ஹாங்காங்கில் ஒரு பெண்மணிக்கு பத்து ஆண்டுகள் என்ன நடந்தது என்றே மறந்து விட்டது. அதற்கான காரணம் தெரிய வந்தால் வியந்து போவீர்கள்!

மலச்சிக்கலின் பின் விளைவுகள்

அதிக சிரமப்பட்டு மலம் கழிப்பதால் பக்க விளைவுகள் இருக்கும் என்பது அநேகருக்குத் தெரியும். இலேசான தலைசுற்றல் மற்றும் தலைவலி ஆகியவை ஏற்படக் கூடும். 
மலச்சிக்கலின் பின் விளைவுகள்
அரிதாக சிலருக்கு மூளைக்குச் செல்லும் இரத்தக் குழாய்களில் அடைப்பு (ஸ்ட்ரோக்) போன்ற வாழ்நாள் பிரச்னைகள் ஏற்படும். 

சீன சமூக ஊடகங்களில் மலச்சிக்கலால் வித்தியாச மான விதத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணைப் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
மறந்து போன நினைவுகள்

மலச்சிக்கலால் அதிக நேரம் கழிப்பறை யில் செலவழிக்கும் பழக்கம் கொண்டவர் ஹாங்காங்கை சேர்ந்த பெண்மணி. ஒரு நாள், கழிப்பறைக்குச் சென்று வந்தவருக்கு ஞாபக மறதி ஏற்பட்டுள்ளது. 
மறந்து போன நினைவுகள்
அவரை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்ற போது, மருத்துவர்கள், அரியவகை ஞாபக மறதியால் பாதிக்கப் பட்டிருப்பதாக தெரிவித் துள்ளனர். 

அப்பெண்மணி க்கு கடந்த பத்து ஆண்டுகள் தன் வாழ்க்கையில் என்ன நடந்தது என்றே நினைவில் இல்லை. 

மலச்சிக்கல் காரணமாக மிகவும் சிரமப்பட்டு, முயற்சி செய்து மலம் கழித்ததினால் ஞாபக மறதி ஏற்பட்டுள்ள தாகவும் மருத்துவர்கள் கூறி யுள்ளனர்.

மூளை செயல்பாடு

மூளையின் சில பகுதிகளுக்கு குறைவான ஆக்ஸிஜன் கிடைத்துள்ள தால், குறுகிய கால மறதியான அம்னீஷியாவால் அப்பெண் பாதிக்கப் பட்டுள்ளார். 
மூளை செயல்பாடு
அதிர்ஷ்ட வசமாக இந்த மறதி எட்டு மணி நேரம் மட்டுமே நீடித்தது. பல்வேறு பரிசோதனை களை செய்த மருத்துவர்கள், அப்பெண்ணின் மூளை செயல்பாடு இயல்பாக இருப்பதாக தெரிவித்தனர்.

கதையா? உண்மையா?
இந்தச் செய்தி ஆன் லைனில் பகிரப்பட்ட போது, பலர் இது பொய்யான செய்தி என்று கருத்து தெரிவித்தனர். 
கதையா? உண்மையா?
ஆனால், மலங்கழிக்கும் போது உருவாகும் அழுத்தம் மூளைக்குச் செல்லும் ஆக்ஸிஜனை தடுப்பதால் 

இது போன்ற விபரீத விளைவுகள் ஏற்படக்கூடும் என்று நரம்பியல் மருத்துவ வல்லுநர்கள் விளக்கி யுள்ளனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings