நரபலி கொடுக்கப்பட்ட 140 குழந்தைகள் எதற்காக? எங்கு நடந்தது தெரியுமா?

0
சர்வதேச ஆராய்ச்சி குழு நடத்திய ஆய்வில் 550 ஆண்டுகளுக்கு முன் பெரு நாட்டின் வட பகுதியில் ஒரே நேரத்தில் 140 குழந்தைகள், 200 இளம் ஒட்டகங்கள் நரபலி கொடுக்கப் பட்டது தெரிய வந்துள்ளது.
நரபலி கொடுக்கப்பட்ட 140 குழந்தைகள் எதற்காக? எங்கு நடந்தது தெரியுமா?
தென் அமெரிக்க நாடான பெரு நாட்டின் வட பகுதியில் அமைந்து உள்ள கடலோரப் பகுதியில் ஏராளமான குழந்தைகளின் எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. 

அவை நரபலி கொடுக்கப்பட்ட குழந்தைகள் என்றும் 5-14 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் தெரிந்துள்ளது. 550 ஆண்டுகளு க்கு முன்பு நரபலி கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று கருதப் படுகிறது. 
ட்ருஜிலோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த தொல்பொருள் பேராசிரியர் கேப்ரியல் ப்ரிடோ மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் வெரானோ 

ஆகியோர் சர்வதேச குழு, நேஷனல் ஜியோகிரஃபிக் சொசைட்டி உதவியுடன் இந்த ஆய்வை 2011-ம் ஆண்டு தொடங்கினர். 
நரபலி கொடுக்கப்பட்ட 140 குழந்தைகள்
பெரு நாட்டின் வட பகுதியில் அமைந்துள்ள ட்ருஜிலோ நகரத்தில் லாஸ் லாமாஸ் பகுதியில் ஆய்வு நடத்தினர். 

சர்வதேச ஆராய்ச்சி குழுவினர் சுமார் 8 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த ஆய்வின் முடிவுகள். நேஷனல் ஜியோகிரஃபிக் நேற்று முன்தினம் வியாழக்கிழமை வெளியிடப் பட்டது.
5-14 வயதுக்கும் உட்பட்ட சுமார் 140 குழந்தைகளின் எலும்புகளை கண்டு பிடித்துள்ளனர். இத்துடன் 200 இளம் ஒட்டகங்களின் எலும்பு களையும் கண்டு பிடித்துள்ளனர். 
நரபலி கொடுக்கப்பட்ட 140 குழந்தைகள் - எதற்காக? எங்கு நடந்தது தெரியுமா?
ஆய்வின் போது கிடைத்த மண்டை ஓடு ஆகிய வற்றை பரிசோதனை செய்ததில், அவர்கள் நரபலி கொடுக்கப் பட்டுள்ளதாக தெரிவித் துள்ளனர். 

இந்த நிகழ்வு சுமார் 550 ஆண்டு களுக்கு முன் நடந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. 

பெரு நாட்டில் கண்டு பிடித்துள்ள இந்த நரபலி தான் உலக வரலாற் றிலேயே மிகப்பெரியது என்று இதுவே முதல் முறை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings