நொய்டாவைச் சேர்ந்த 23 வயது இளைஞர், போனில் பேசிக்கொண்டே மூன்றாவது மாடி யிலிருந்து தவறி விழுந்து உயிர் இழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதி யினரைத் துன்பத்தில் ஆழ்த்தி யுள்ளது.
3 மடியில் குடியிருந்த குமார்
நொய்டாவில் உள்ள 27வது செக்டர் பகுதியில் உள்ள நான்கு மாடி குடியிருப்பில் தனது நண்பர் அமித் குமாருடன் சேர்ந்து குடியிருந் திருக்கிறார் குமார்(23). மூன்றாவது மாடியில் தங்கி இருந்த குமார், செக்டர் 18 பகுதியில் உள்ள ஒரு பலகாரக் கடையில் சமையல் காரராக பணியாற்றி வந்திருக்கிறார்.
புது மாப்பிளை
நொய்டாவில் பணியாற்றி வரும் குமாருக்கு ஒரு மாத காலத்திற்கு முன்பு தான் திருமணம் ஆகியுள்ளது. தனது சொந்த ஊரில் இருக்கும் மனைவியுடன் போனில் உரையாடிய பொது தான் அவர் மூன்றாவது மாடி யிலிருந்து தவறி விழுந்த தாகக் கூறப் படுகிறது.
நேரில் பார்த்தவர்கள்
சம்பவம் நடந்த பொது, அருகில் உள்ள மக்கள் அவர் மாடி யிலிருந்து விழுந்ததை நேரில் பார்த்திருக் கின்றனர். இந்த சம்பவம் புதன்கிழமை மலை 4.30 மணி அளவில் நடந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித் துள்ளனர்.
உயிர் இழந்தார்
மூன்றாவது மாடி யிலிருந்து கீழே வீழ்ந்து குமாரை அருகில் உள்ள மருத்துவ மனைக்குக் கொண்டு சென்று இருக்கின்றனர்.
மருத்துவ மனைக்குச் செல்லும் வழியிலேயே குமார் பரிதாபமாக உயிர் இழந்திருக் கிறார். மருத்துவர் களும் அவரின் உடலைச் சோதித்துப் பார்த்து இறந்து விட்டதாக தெரிவித் துள்ளனர்.
சந்தேகத்தின் பெயரில் விசாரணை
தற்பொழுது குமாரின் உடல் பிரேதப் பரிசோதனை க்கு அனுப்ப பட்டுள்ளது. அவரின் குடும்பத்தி னருக்கும் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. உண்மை யிலேயே குமார் மூன்றாவது மாடி யிலிருந்து தவறி விழுந்து தான் உயிர் இழந்தாரா? என்று போலீஸ் சந்தேகத்தின் பெயரில் விசாரணையை துவங்கி யுள்ளது.
Thanks for Your Comments