திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தெற்கு திருப்பூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் இரு சக்கர வாகனங்கள் அடிக்கடி திருட்டு போவதாக காவல் துறையினரு க்கு அடிக்கடி தகவல் வந்துள்ளது.
இதனை கவனித்த காவல் துறையினர் இது குறித்த விசாரணையை மேற்கொள்ள தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
காவல் துறையினரின் விசாரணையில்., கடந்த சில தினங்களுக்கு முன்னர் இளம் பெண் மற்றும் அவருடன் வாலிபர் தனித்தனி வாகனத்தில் வந்து கொண்டு இருந்தனர்.
இவர்களின் மீது சந்தேகம் கொண்ட காவல் துறையினர்., இருவரையும் நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில்., இருவரும் கணவன் – மனைவி என்றும்., பணி முடிந்து வீட்டிற்கு திரும்புவ தாகவும் கூறியுள்ளார்.
இவர்களின் பேச்சுக்கள் முன்னுக்கு பின்னர் முரணாக இருப்பதாக சந்தேகித்த காவல் துறையினர் இருவரையும்
தனித்தனியாக மேற்கொண்ட விசாரணைக்கு பின்னர் இருவரும் கள்ளகாதல் ஜோடிகள் என்பது தெரிய வந்தது.
இதனை யடுத்து மேற்கொண்ட விசாரணையில் இவர்களின் உறவை போல திருட்டு வாகனங்கள் என்பது தெரிய வந்தது.
இவர்கள் இருவரும் அங்குள்ள பி.கே.ஆர் காலனி பகுதியை சார்ந்த லோகநாதன் (வயது 47) மற்றும் கல்லாங்காட்டை பகுதியை சார்ந்த சுதா (வயது 36) என்பதும் தெரிய வந்தது.
இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் வசித்து கொண்டு பகல் நேரத்தில் நல்லவர்கள் போலவும்., இரவு நேரத்தில் ஆங்காங்கே இருக்கும் இரு சகாக்கர் வாகனத்தை திருடி உல்லாசமாக இருந்து வந்ததும் தெரிய வந்தது.
மேலும்., இரவு நேரத்தில் காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டால் இருவரும் கணவன் – மனைவி என்று காவல் துறையினரு க்கு டிமிக்கி கொடுத்ததும் தெரிய வந்தது.
இரவு நேரத்தில் திருடும் வாகனங்களை வைத்து உல்லாச வாழ்க்கையை கொண்டாடி வந்ததும் தெரிய வந்தது.
இதனை யடுத்து இருவரையும் கைது செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு சிறையில் அடைத்தனர்.
Thanks for Your Comments