வெயில் காலத்தில் உடற்பயிற்சி செய்பவர்கள் கவனத்திற்கு !

0
கோடையில் ஒரு மணி நேரத்திற்கு மேல் உடற்பயிற்சியில் ஈடுபட கூடாது. அந்த ஒரு மணி நேரத்திலும் இடைவெளி எடுத்துக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்யும் போது உடலின் வெப்பநிலை அதிகரிக்கும். அதுவே வெய்யில் காலம் என்றால் சொல்லவே தேவை யில்லை. 
வெயில் காலத்தில் உடற்பயிற்சி செய்பவர்கள் கவனத்திற்கு



அதனால் சம்மரின் போது ஜிம் செல்பவர்கள் இதை யெல்லாம் தவறாமல் பின்பற்றவும். ஜிம்முக்கு செல்பவர்கள் அதிகமாக தண்ணீர் குடிக்க மாட்டார்கள்.

ஆனால் வெயில் காலத்தில் எப்போதும் குடிப்பதை விட அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். அப்போது தான் உடலில் நீர்ச்சத்து இருக்கும்.
அதிகம் வியர்ப்பதால் உடலில் உள்ள எலக்ட்ரோலைட்டுகளின் அளவு குறையும். அதனால் சோடியம், பொட்டாசியம் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

எலுமிச்சை ஜூஸில் உப்பு சேர்த்து குடிக்க வேண்டும். அதிகமாக இளநீரும் குடிக்கலாம். 



கோடை காலத்தில் ஜிம் செல்ல ஏற்ற நேரம் அதிகாலை தான். உச்சி வெயிலில் ஜிம் செல்வதை தவிர்க்கவும்.

உடற் பயிற்சிக்கு பின்னர் நீர்ச்சத்து உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது உடலுக்கு நல்லது. கடுமையான உடற் பயிற்சிகள் செய்வதை தவிர்த்து எளிமையான பயிற்சிகளை மேற்கொள்ள லாம். 
அதே போல் இறுக்கமான உடைகள் அணிவதை தவிர்க்கவும். ஏனென்றால் காற்றோட்ட மான உடைகள் அணிவது அவசியம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings