தோண்ட தோண்ட சடலங்கள், பெண்கள் சிறுமிகள் என பிணங்களைப் பார்த்தவர் களுக்கு அதிர்ச்சியாகத் தான் இருந்தது.
தென்னாப்பிரிக்கா வின் நும்பி கிராமத்தில் ஜூலியஸ் தபிசோ என்பரின் வீட்டில் தான் அந்த சடலங்கள் புதைக்கப் பட்டிருந்தன.
யார் இவர்கள் எதற்காக இப்படி புதைக்கப் பட்டிருக்கிறார் கள் என்று போலீசார் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சிகர மான தகவல்கள் வெளி வந்தன.
கடந்த வாரம் இளம் பெண் ஒருவர் மாயமானார். அவரை காணவில்லை என்று போலீசில் பெற்றோர்கள் புகார் அளித்தனர்.
வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் அந்தப் பெண் கடைசியாக ஜூலியஸ் என்பவரின் வீட்டிற்கு சென்றது தெரிய வந்தது.
ஜூலியஸ் அந்த பெண்ணின் ஃபேஸ்புக் நண்பர் என்பதால் அவரது அழைப்பை ஏற்று வீட்டுக்கு சென்றவர் மாயமானார்.
ஜூலியஸ் வீட்டிற்கு சென்ற போலீசார், சாதாரணமாக விசாரித்த போது சமாளித்தான். பின்னர் தங்கள் பாணியில் விசாரித்து உண்மையை வரவழைத்தனர்.
ஃபேஸ்புக்கில் பழகி வீட்டிற்கு வரவழைத்த ஜூலியஸ் முதலில் அந்த பெண்ணுடன் உறவு கொண்டான். அந்த பெண்ணும் ஒத்துழைத் திருக்கிறார்.
கடைசியில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணை அடித்துக் கொன்று தனது வீட்டைச் சுற்றி இருந்த நிலத்தில் புதைத்து விட்டான்.
இளம் பெண்ணை மட்டுமல்லாது இதே போல நான்கு பெண்களை கொன்று புதைத்திருப்பதாக போலீசில் வாக்குமூலம் அளிக்கவே அவன் சொன்னதைக் கேட்டு போலீசார் அதிர்ச்சி யடைந்தனர்.
ஞாயிறன்று ஜூலியசின் வீட்டைச்சுற்றி இருந்த நிலத்தில் தோண்டியதில் சடலங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்தன. நான்கு பெண்களையும் கடந்த ஆண்டு கொன்று புதைத்துள்ள தாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
கொலை செய்வதற்கு மூன்று பெண்களை பலாத்காரம் செய்து பின்பே அவர்களின் கதையை முடித்திருக் கிறான்.
ஒரு கொலையில் கைதான ஜூலியஸ் ஐந்து கொலை மற்றும் பலாத்கார வழக்குகளில் சிக்கியுள்ளான். நாளைய தினம் நீதிபதி முன்பு ஆஜர்படுத்த உள்ளனர்.
தமிழ் நாட்டில் கடந்த 35 ஆண்டு களுக்கு முன்பு பெண்களையும் ஆண்களையும் கொன்று வீட்டின் சுவரில் புதைத்து வைத்த ஆட்டோ சங்கரை கைது செய்து சிறையில் அடைத்ததோடு தூக்கு தண்டனையும் அளித்தனர்.
இத்தனை ஆண்டுகள் கழித்து அது போல ஒரு சீரியல் கொலையாளியை தென்ஆப்பிரிக்கா வில் போலீசார் கைது செய்துள்ளனர்.
Thanks for Your Comments