பிரியாணிக்காக ரூ.40,000 இழந்த சென்னை பெண்ணின் சோக கதை !

0
பசி நேரத்தில் சூடாக பிரியாணி சாப்பிட நினைத்த பெண்ணிடம் இருந்து 40 ஆயிரம் ரூபாய் பறிக்கப்பட்ட சம்பவம் பிரியாணி பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
பிரியாணிக்காக ரூ.40,000  இழந்த சென்னை பெண்



சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, ஒரு கிலோ பிரியாணி என எந்த பிரியாணியை ஆர்டர் செய்தாலும் அதன் மதிப்பு 300 ரூபாயை தாண்டாது. ஆனால் சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி பிரியா ஒரு பிளேட் பிரியாணியை ரூ. 40 ஆயிரம் கொடுத்து வாங்கி யுள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
சென்னை சவுகார் பேட்டை பகுதியை சேர்ந்தவர் பிரியா இவர் நேற்று முன் தினம் ஆன்லைனில் ஹைதராபாத் பிரியாணியை ஆர்டர் செய்துள்ளார். பிரியாணிக் கான பணம் 76 ரூபாயையும் ஆன்லைன் மூலம் செலுத்தி யுள்ளார்.

இந்நிலையில், ஆர்டர் செய்யப்பட்ட பிரியாணி கேன்சல் செய்யப் பட்டுள்ளது. பின்னர், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திடம் தொலைபேசி யில் தொடர்பு கொண்டு, தனது பணத்தை திரும்ப கேட்டுள்ளார்.

அப்போது, தொலைபேசி யில் பேசியவர், 76 ரூபாய் பெரிய தொகை இல்லை என்பதால், 5 ஆயிரம் ரூபாயை செலுத்தமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அவ்வாறு செலுத்தினால், 5 ஆயிரத்து 76 ரூபாயாக உங்கள் அக்கவுன்ட்-ல் டெபாசிட் செய்யப்படும் எனவும் தெரிவித் துள்ளார்.

இதை நம்பிய பிரியா, 5 ஆயிரம் ரூபாயை செலுத்தி யுள்ளார். அதன் பிறகு, மீண்டும் பிரியாவை தொடர்பு கொண்ட அந்த நபர், உங்கள் கைப்பேசிக்கு வரும் ஓடிபி நம்பரை கூறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.



ஓடிபி நம்பரை தெரிவித்த பிரியா, இதேபோல், 8 முறை 5 ஆயிரம் ரூபாயை செலுத்த, பிரியாணிக்கு பதிலாக செலுத்த வேண்டிய பணம் 40 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. இருப்பினும், பிரியாணியும் வரவில்லை, பிரியாணிக் காக செலுத்திய பணமும் வந்த பாடில்லை…
இதன் பின்னர் தான், தான் ஏமாற்றப் பட்டதை உணர்ந்த பிரியா, செய்வதறி யாமல் திகைத்து நின்றுள்ளார். இதனை யடுத்து, வடபழனி காவல் நிலையத்திற்கு சென்ற பிரியா நடந்த நிகழ்வுகளை எடுத்துரைத் துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings