மாணவிகளுக்கு சாபம் விட்ட நிர்மலா தேவி?

0
தனிமை, வழக்கு, புறக்கணிப்பு போன்ற காரணங்களால் தான் நிர்மலாதேவி இப்படி எல்லாம் மனநிலை பாதிக்கப் பட்டவர் போல நடந்து கொள்வதாகவும், அவர் நடிக்க வில்லை எனவும் அவரைப் பற்றி அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
மாணவிகளுக்கு சாபம்
விருதுநகர் மாவட்டம் அருப்பு கோட்டையில், தனியார் கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த வழக்கில், 

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், உதவி பேராசிரியர் நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ளார். 
இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கில் ஆஜராவதற் காக அவ்வப்போது அவர் நீதி மன்றத்துக்கு வந்து கொண்டிருக்கிறார். 

இந்நிலையில், கடந்த முறை ஆஜராக வந்த அவர் சுடிதார் அணிந்திருந்தார். அதுவே பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில், நேற்று நீதிமன்றத்துக்கு வந்தார். வழக்கின் விசாரணை வரும் 22-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டது. 

அப்போது அவரது நடவடிக்கை களிலும் சிறிது மாற்றம் காணப்பட்டது. நீதிமன்ற வளாகத்தில் ஆங்காங்கே தியானம் செய்வது போல அமர்ந்திருந்தார். 

காமாட்சியம்மன் சுவாமி வந்ததாகக் கூறிய அவர், 'தனக்கு எதிராகப் புகார் கொடுத்தவர்கள் இறந்து விட்டார்கள். 

தனக்கு விடுதலை கிடைத்து விட்டது. மனரீதியாக குடும்பத்தி னரோடு பேசிக்கொண்டு தான் இருக்கிறேன்' என ஏதேதோ பேசினார். 

நீண்ட போராட்டத் துக்குப் பின்னர், காவல் துறையினர் அவரை அங்கிருந்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். 
அதன் பின்னர், சொந்த ஊரான அருப்பு கோட்டைக்குச் சென்ற அவர், இரவில் அங்கே உள்ள தர்காவில் அமர்ந்து ஒரு மணி நேரத்துக்கு மேலாகப் புலம்பி யுள்ளார். 

அதன் பின்னர், அங்கே வந்த காவல் துறையினர், அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். அவரது வீட்டின் வாசல் பகுதியை சுத்தம் செய்யாமல் வைத்திருந்தார். 

அவர் விட்டு விட்டு வந்திருந்த இருசக்கர வாகனம் மற்றும் நகையை எடுத்து கொண்டு இன்று காலை காவல் துறையினர் அவரது வீட்டுக்கு வந்து கொடுத்தனர். 
இந்நிலையில், ஏன் இப்படி நடந்து கொள்கிறார்... என்ன ஆனது என விசாரித்தோம். அவருக்குத் தெரிந்த சிலரிடம் கேட்ட போது, சிறையில் இருக்கும் போதே மனரீதியாக அவர் பாதிக்க பட்டிருந்தார். 
மாணவிகளுக்கு சாபம் விட்ட நிர்மலா தேவி?
ஆனால், அதற்கான சிகிச்சை எதுவும் எடுக்க வில்லை. 10 மாதங்களு க்குப் பின் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகாவது, தன் குடும்பத்தினர் தன்னிடம் பேசுவார்கள் என நினைத்தார். 

ஆனால் அதுவும் நடக்கவில்லை. தற்போது, பேசுவதற்குக் கூட யாரும் இல்லாமல் தனிமை, வழக்கு, சிறை, புறக்கணிப்பு என மனரீதியாகக் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளார். 

பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப் பட்டுள்ளார். அதனால் தான் அவர் அப்படி எல்லாம் நடந்து கொள்கிறார். ஒரு முறை ஒரு மாதிரியும் அடுத்த முறை வேறு மாதிரியாகவும் பேசுவார். 

இவர் நடிப்பதாக சிலர் கூறுகின்றனர். ஆனால், நடிக்க வேண்டிய அவசியம் இல்லை. எப்படி இருந்தாலும் கிடைக்கும் தண்டனை கிடைப்பது உறுதி தான்.

எனவே, நடிப்பதால் அவருக்கு எந்தப் பயனும் இல்லை. அவருக்கு ஏற்பட்டுள்ள வெறுப்பால் தான் இப்படி நடந்து கொள்கிறார். 

ஏதோ ஒரு காரணத்துக் காக அரசும் அவருக்கு மனரீதியான நெருக்கடிகளைக் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறது'' என்று தெரிவித்தனர்.
பலர், நிர்மலா தேவி தண்டனையில் இருந்து தப்புவதற் காகத் தான் இது மாதிரியக நடந்து கொள்கிறார் என்றும் அவருக்கான தண்டனை விரைவாக வழங்கபட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings