டைனோசர் என்ற பெயரைக் கேட்டாலே எல்லோரின் மனதில் ஒரு ஆச்சர்யம் குடி கொள்ளும். அந்தளவுக்கு மக்கள் டைனோசர் பற்றி படிபதிலும் கேட்பதிலும் மிகுந்த ஆர்வமுடைய வர்களாக இருக்கிறார்கள்.
அதனால் டைனோசர் படத்துக்கு கோடி கோடியாய் வசூல் குவிகிறது. இந்நிலையில் 140 பிரான்ஸ் நாட்டில் சும்மார் 140 மில்லியன் ஆண்டுகளு க்கு முன் வாழ்ந்த டைனோசர் ஒன்றின் ராட்சத தொடை எலும்பு கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
டைனோசர் வாழ்ந்த காலங்களில் பிரமாண்ட மிருகங்கள், உள்பட பல்வேறு அரியவகை விலங்குகல் வாழ்ந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் உயிரியல் ஆய்வாளர்கள் தொல்லியல் ஆராய்ச்சி யாளர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் தொல்லியல் ஆய்வாளர்கள் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் பிரான்ஸ், தென்மேற்கு பகுதியில் உள்ள ஏஞ்சியாக் - சரண்டீ ஆகிய பகுதிகளில் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்,
இங்கு பல் நூற்றாண்டு களுக்கு முன்னர் வாழ்ந்த உயிரினங்களின் படிமங்களை அவர்கள் கண்டு பிடித்துள்ளனர். இங்கு சமீபத்தில் அகழ்வாராய்ச்சி செய்த ஆராய்ச்சி யாளர்களுக்கு, மண்ணில் புதையுண்ட 2 மீட்டர் நீளம் கொண்ட ராட்சத தொடை எலும்பு கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
மேலும் இது 140- மில்லியன் ஆண்டுகளு க்கு முன்னர் வாழ்ந்த டைனோசர் களின் எலும்பு வகை என்றும் அது தாவர உண்ணி என்றும் கூறியுள்ளனர். இந்த செய்தி தற்போது வைரல் ஆகி வருகிறது.
Thanks for Your Comments