எறிந்த பந்தை எடுத்து வருவது, மளிகை சாமான் பையை தூக்கிக் கொண்டு வருவது, நீச்சல் தெரியாமல் தத்தளிக்கும் எஜமானை
காப்பாற்ற தண்ணீருக்குள் குதிப்பது என்று நாய்கள் பற்பல உதவிகளை செய்யக் கூடியவை. மிகவும் அன்பாக இருக்கக் கூடிய செல்ல பிராணியான நாய், மனிதனுக்கு உற்ற நண்பனும் கூட.
பலருக்கு அவர்கள் வீட்டு நாயை 'உங்க நாய்' என்று சொன்னால் கூட கோபம் வந்து விடும். 'டைசன்' என்று பெயரோடு கூற வேண்டும்.
தெரு கலைஞன்
யோர்கே லூயிஸ் ரூய்ஸ் என்ற இளைஞன், தெரு கலைஞன். தெருவில் வித்தை காட்டி பிழைப்பு நடத்துபவர்.
அவரை ரசிப்பதற் கென்று சிலர் இருந்தனர். ஆனாலும் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்வதற் காக யோர்கே, பிரேசிலுக்கு குடி பெயர்ந்தார்.
அங்கு ஃபோர்த்தலேசா என்ற பகுதியில் தெருக்களில் வித்தை காட்டுவதன் மூலம் பணமீட்டி வாழ்ந்து வருகிறார்.
நகரத்தின் பரபரப்பான ஃபெரைரா ஸ்குயர் என்ற பகுதியில் சிலை போல நின்று மக்களை சந்தோஷப் படுத்துவது யோகே லூயிஸின் வழக்கம்.
ஜாஸ்பி
யோர்கேயை போன்று எத்தனையோ தெரு கலைஞர்கள் அந்நகரத்தில் இருந்தாலும், அவனுக்கு அதிக பார்வையாளர்கள் உள்ளனர்.
ஏன் தெரியுமா? யோர்கேயுடன் அவனது நாய் ஜாஸ்பியும் சேர்ந்து சிலை போல நிற்கும்.
யோர்கே செல்லுமிட மெல்லாம் அமைதியாக உடன் செல்லும் ஜாஸ்பி, யோர்கே கையை மடக்கிக் கொள்ள அதில் சிலை போல
உட்கார்ந் திருக்கும். நாயும் மனிதனும் சேர்ந்து சிலை போல நிற்பதால் மற்ற கலைஞர்களை காட்டிலும் யோர்கேக்கு ரசிகர்கள் அதிகம் உள்ளனர்.
டிவிட்டரில் வைரல்
ஃபோர்த்தலேசா நகரின் தெருக்களில் யோர்கேயும் ஜாஸ்பியும் பிரபலமான தால் நகரின் பல பகுதிகளி லிருந்தும் மக்கள் அவர்கள் இருவரையும் பார்க்க குவிந்து வருகின்றனர்.
யோர்கேயும் ஜாஸ்பியும் சிலை போல நிற்கும் வீடியோ காட்சி டிவிட்டரில் பகிரப்பட்ட போது, மூன்று வார காலத்திற்குள் 50 லட்சத்திற்கும் அதிகமானோர் அதைப் பார்த்துள்ளனர்.
2 லட்சத்து 60 ஆயிரம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். 91 ஆயிரம் பேர் பின்னூட்ட மிட்டுள்ளனர்.
Thanks for Your Comments