திருமணமாகி சில நாளில் கணவரை விட்டு லெஸ்பியனுடன் சென்ற இளம் பெண் !

0
ராஜஸ்தானைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருமணமான 23 நாட்களில் தன் கணவர் வீட்டிலிருந்து காணாமல் போனார். தற்போது அவர் இருக்கு மிடத்தை கண்டறிந்துள்ள தாக ராஜஸ்தான் காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.
லெஸ்பியனுடன் சென்ற இளம் பெண்



உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் வசிக்கும் அந்தப் பெண்ணின் கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் தங்களது தேடுதல் வேட்டையைத் தொடங்கிய காவல் துறையினர் ஹரியானா மாநிலம் மானெசரில் அந்தப் பெண் வசிப்பதை கடந்த திங்களன்று கண்டு பிடித்தனர்.
அந்த இளம்பெண் தனது கணவரது வீட்டில் இருந்து கடந்த ஜூன் 1 ஆம் தேதியன்று வெளியேறி ஹரியானாவில் வசிக்கும் தனது லெஸ்பியன் பார்ட்னருடன் வாழத் தொடங்கி இருக்கிறார். இவர்கள் இருவருக்கு மான உறவு இன்று நேற்று தொடங்கிய தில்லையாம், கடந்த 4 வருடங்களாக இவர்கள் உறவில் இருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

கணவரது புகாரின் அடிப்படையில் அவர்கள் இருவரையும் கஸ்டடியில் எடுத்த காவல் துறையினர் மாஜிஸ்ட்ரேட்டின் முன்னிலையில் நீதி மன்றத்தில் ஒப்படைத்தனர். அப்போதும் அவர்கள் இருவரும் தங்களது நிலை குறித்து வாதிட்டனர். 
திருமணமாகி லெஸ்பியனுடன் சென்ற இளம் பெண் !



தாங்கள் இருவரும் வயது வந்தவர்கள் என்பதால் தங்களுக்கான துணை மற்றும் வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை தங்களுக்கு இருப்பதாக அவர்கள் தங்கள் வாதத்தை முன் வைத்தனர். அத்துடன் தனக்கு நடந்த திருமணமே குடும்பத்தாரின் வற்புறுத்தலின் அடிப்படை யில் வலுக்கட்டாய மாக நிகழ்ந்தது என்பதால் தன்னால் அந்த உறவில் நீடிக்க முடியாது என்றார் ராஜஸ்தானிய இளம்பெண்.
இளம்பெண்ணின் லெஸ்பியன் பார்ட்னர் தேசிய அளவிலான விளையாட்டு வீரங்கனை என்பதாலும் அவர்களது வாதத்தை மறுக்க சட்டத்தில் இடமில்லை என்பதாலும் காவல்துறை அதிகாரிகள் அந்தப் பெண்கள் இருவரையும் அவர்களிஷ்டப்படி எங்கு வேண்டு மானாலும் சென்று வாழலாம் எனக் கூறி சுதந்திரமாகச் செல்ல அனுமதித்து விஷயத்தைச் சுமுகமாக முடித்து வைத்தனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings