இந்தியா வாங்கியுள்ள அப்பாச்சி ரக ஹெலிகாப்டரின் சிறப்பம்சங்கள்?

1 minute read
0
அமெரிக்கா விடமிருந்து அப்பாச்சி ரக ஹெலிகாப்டரை இந்தியா வாங்கியுள்ள நிலையில், அதன் சிறப்பம் சங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.
அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்



அமெரிக்கா விடமிருந்து இந்தியா வாங்கியுள்ள ஹெலிகாப்டரின் பெயர் AH-64 Apache. அதிவேக மாகச் சுழலும் நான்கு பிளேடுகள், இரண்டு எஞ்சின் போன்ற வற்றைக் கொண்ட அப்பாச்சி ஹெலிகாப்டரை வடிவமைத்தது விமானத் தயாரிப்புக்கு பெயர் பெற்ற போயிங் நிறுவனம்.

தாக்க வேண்டிய இலக்கை கண்டறிவதற்குப் பயன்படும் சென்சார், இரவு நேரத்தில் துல்லியமான காட்சிகளைக் காண உதவும் தொலைநோக்கி போன்றவை ஹெலிகாப்டரின் முன்புறத்தில் அமைக்கப் பட்டுள்ளன. 

தரையிறங்கும் சக்கரங் களுக்கு நடுவே நவீனத் துப்பாக்கி, Hellfire ஏவுகணை களை செலுத்துவ தற்கான 4 ஏவுக்கருவிகள் ஆகியவை உள்ளன. இருவர் அமர்ந்து செல்லும் வகையில் அப்பாச்சி ஹெலிகாப்டர் வடிவமைக்கப் பட்டுள்ளது. 
ஒருவர் ஹெலிகாப்டரை இயக்கும் நேரத்தில் மற்றொருவர் ஆயுதங்களைப் பயன்படுத்தி இலக்கைத் தாக்கும் பணியில் ஈடுபடுவார். அப்பாச்சி ரக ஹெலிகாப்டரை இயக்குபவர் களுக்கு குறைந்தது இரண்டு ஆண்டுகள் கடுமையான பயிற்சி அளிக்கப் படுகிறது.

மணிக்கு 293 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்ட அப்பாச்சி ஹெலிகாப்டர், தொடர்ந்து ஆயிரத்து 200 குண்டுகளைச் சுடும் வலிமை பெற்றது. 

பைலட் மற்றும் ஆயுதங்களை இயக்குபவர் ஆகிய இருவரின் ஹெல்மெட்டிலும் குறிபார்த்துச் சுடுவதற்குத் தேவையான காட்சிகளைக் காட்டும் தொலை நோக்கி ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது. 
அப்பாச்சி ரக ஹெலிகாப்டரின் சிறப்பம்சங்கள்




தலை யசைவைப் புரிந்து கொண்டு வெளிப்புறக் கேமராக்கள் செயல் படுவதற்கும் இவை துணை புரிகின்றன. AH-64 Apache ஹெலிகாப்டர்களை அமெரிக்கா தவிர கிரீஸ், ஜப்பான், இஸ்ரேல், நெதர்லாந்து, சிங்கப்பூர், சவூதி அரேபியா, எகிப்து உள்ளிட்ட நாடுகளும் பயன்படுத்தி வருகின்றன.
1986-ம் ஆண்டு ராணுவப் பயன்பாட்டுக்கு வந்த அப்பாச்சி, பனாமா, ஆப்கானிஸ்தான், ஈராக், லெபனான் போன்ற நாடுகளில் நடந்த போர்களின் போது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ராணுவங் களுக்குப் பலம் சேர்த்தது. 

இரு ஆண்டு களுக்கு முன் லிபியாவில் கடாஃபியை முடக்குதற்கு நடந்த முயற்சியில் பிரிட்டனுக்கு உதவியதும் இவ்வகை ஹெலிகாப்டர்கள் தான். தற்போது இந்தியாவும் இந்த ஹெலிகாப்டரை வாங்கியுள்ளது
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 6, April 2025
Privacy and cookie settings