17 சிஐஏ உளவாளிகளை பிடித்து விட்டதாக ஈரான் அரசாங்கம் தெரிவித் துள்ளது. ஈரானின் இந்த அறிவிப்பு அமெரிக்காவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஈரான் அமெரிக்கா இடையிலான பிரச்சனை மற்றும் மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஈரான் நேற்று முதல் நாள் இங்கிலாந்து எண்ணெய் கப்பலை சிறை பிடித்த பின் இந்த பிரச்சனை இன்னும் அதிகம் ஆனது. இந்த எண்ணெய் கப்பலில் 18 இந்தியர்கள் உட்பட 23 பேர் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரையும் ஈரான் சிறை பிடித்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.
செய்தி
இந்த நிலையில் தான் 17 சிஐஏ உளவாளிகளை பிடித்து விட்டதாக ஈரான் அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஈரானில் செயல்பட்டு வந்த இந்த அமெரிக்க உளவாளி களை சில நாட்களுக்கு முன் ஈரான் ராணுவத்தினர் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
ஒரு குழுவாக செயல்பட்டு வந்த இவர்களை கைது செய்து சிறையில் அடைத்து உள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
சிலருக்கு தண்டனை
இதில் சிலருக்கு தூக்கு தண்டனையும், சிலருக்கு ஆயுள் தண்டனையும் கொடுக்க போவதாக ஈரான் தெரிவித்துள்ளது. முக்கிய தகவல்களை திருடி வெளியிட்ட அமெரிக்க உளவாளி களுக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட வாய்ப்புள்ளது.
மொத்தம் 8 பேருக்கு ஈரான் தூக்கு தண்டனை அளிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
காரணம்
இவர்கள் எல்லோரும் ஈரானின் எண்ணெய் கிணறுகள் குறித்த தகவல்கள், அணு ஆயுத உற்பத்தி குறித்த தகவல்கள், அரசு திட்டங்கள் குறித்த தகவல் களை திருடி வெளியிட்டு இருக்கிறார்கள்.
கடந்த இரண்டு வருடங்களு க்கு மேலாக இவர்கள் ஈரானில் செயல்பட்டு வந்தனர் என்று கூறப்படுகிறது. இவர்களிடம் இருந்து முக்கியமான ஆவணங்கள் பல பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
கோபம்
ஈரானின் இந்த அறிவிப்பு அமெரிக்காவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஏற்கனவே ஈரான் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் கோபத்தில் உள்ளார். இந்த நிலையில் ஈரானின் இந்த செயல் அமெரிக்காவை மேலும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது
Thanks for Your Comments