இது குறித்து நம்மிடம் பேசிய போலீஸ் உயரதிகாரி ஒருவர், `கடந்த 7-ம் தேதி `கிக் பாக்ஸர்' ஹரிதாஸ் கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் அங்கு சென்றோம்.
அப்போது அவரின் முகம், கை மற்றும் கழுத்தில் மட்டும் 26 வெட்டுக் காயங்கள் இருந்தன. அந்தளவுக்கு அவரின் மீது கொலை செய்த கும்பலுக்கு ஆத்திரம் இருந்துள்ளது.
இந்தக் கொலைக்கு மூளையாக இருந்தது சேத்துப்பட்டு செந்தில். இவரின் தலைமையில் கடந்த மூன்று மாதங்களாக அம்பத்தூர் ரயில்வே மைதானத்தில் கிக் பாக்ஸர் ஹரிதாஸை கொலை செய்யத் திட்டமிடப் பட்டுள்ளது.
அம்பத்தூர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த பி.கே என்கிற கரிகாலன் மற்றும் மணி என்கிற மணிவண்ணன், செந்தில் (சேத்துப்பட்டு செந்தில்), தாஸ்பாய், ராமமூர்த்தி, பாலாஜி, மணி என்கிற நெப்போலியன் ஆகியோர் ஹரிதாஸு க்கு ஆதரவாளர் களாக இருந்தனர்.
ஹரிதாஸுக்கும் இவர்களுக்கும் சில காரணங் களுக்காக முன்விரோதம் ஏற்பட்டது. இதனால் தான் சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த டார்வின் திருவள்ளுவரைச் சேர்ந்த ரஞ்சித் ஆகியோருடன் ஹரிதாஸை கொலை செய்வது தொடர்பாக ஆலோசிக்கப் பட்டுள்ளது.
இதை யடுத்து ஹரிதாஸ், தனியாக அம்பத்தூர் ரயில் நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்குச் செல்வதை இந்தக் கும்பல் சில நாள்களாக நோட்ட மிட்டுள்ளனர்.
சம்பவத்தன்று இந்தக் கும்பல், மது அருந்திக் கொண்டிருந்த ஹரிதாஸை சுற்றி வளைத்து வெட்டினர். இதனால் சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.
ஹரிதாஸ் கொலை குறித்து அவரின் மகன் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் நடந்த விசாரணையில் முன் விரோதத்தில் ஹரிதாஸ் கொடூரமாக கொலை செய்யப் பட்டது தெரிய வந்தது.
கொலை சம்பவத்துக்குப் பிறகு அரக்கோணத்து க்குச் சென்ற இந்தக் கும்பல் அங்கேயே தங்கி யிருந்தது. அடுத்து வி.வி.ஐ.பி. ஒருவருக்கு போன் செய்து தங்களைக் காப்பாற்றும் படி போனில் கூறியது.
அந்த செல்போன் சிக்னல் அடிப்படையில் அவர்கள் பதுங்கி யிருந்த இடத்தைக் கண்டறிந்தோம். வி.வி.ஐ.பி.யைச் சந்திக்க அவர்கள் வந்த போது நாங்கள் மடக்கிப் பிடித்தோம்.
அப்போது, கரிகாலன், மணிவண்ணன், செந்தில் ஆகியோர் தவறி விழுந்ததால் அவர்களின் கைகள் முறிந்தன. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
கைகட்டு களுடன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு அவர்கள் மூன்று பேர் உட்பட 8 பேரையும் சிறையில் அடைத்துள்ளோம். பி.கே. என்கிற கரிகாலனும், மணி வண்ணனும் இரட்டையர்கள்.
இவர்கள் மீது சில வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. கோழிகுஞ்சு சுரேஷ், மார்க்கெட் பகுதியில் கோழி குஞ்சு வியாபாரம் செய்து வருகிறார்.
ஹரிதாஸ் மீது கடந்த 2003-ம் ஆண்டு சசி என்பவரைக் கொலை செய்த வழக்கு பதிவு செய்யப் பட்டிருந்தது. இந்த வழக்கில் அவர் விடுதலையாகி விட்டார். 2007, 2011 ஆகிய ஆண்டுகளில் கொலை முயற்சி வழக்குகள் பதிவாகி யுள்ளன.
பிளாட்பார கடைகளில் கவனம் செலுத்திய பிறகு ஹரிதாஸ், ஆட்டோ ஓட்டினார். இதனால் அவர் ரவுடிசத்தை விட்டு விலகினார்.
ஹரிதாஸை கொலை செய்ய, கைதான ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருந்ததாக வாக்கு மூலத்தில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதில், தொழில் போட்டி, ஹரிதாஸின் வளர்ச்சி, கோயில் திருவிழா, தனிப்பட்ட முன் விரோதம் போன்ற தகவல்களைத் தெரிவித்தனர். ஹரிதாஸை கொலை செய்யச் சென்றவர்களில் சிலர் அப்ரூவராகவும் மாறியுள்ளனர்.
அவர்கள் கொலைக்கான முழு விவரத்தையும் எங்களிடம் தெரிவித் துள்ளனர் என்றார். ஹரிதாஸை கொலை செய்த வியாபாரி ஒருவர், `ஆரம்பத்தில் ஹரிதாஸ்தான் எங்களுக்கு எல்லாம்.
அவருக்காக அம்பத்தூர் பகுதியில் அடிதடியில் ஈடுபட்டோம். மாமூல் கொடுக்காத வர்களை கடை வைக்க விடமாட்டோம். ஒருகட்டத்தில் ஹரிதாஸின் கை ஓங்கியது. அப்போது அவர் எங்களை மறந்து விட்டார்.
மேலும், அவரின் வளர்ச்சிக்காக உழைத்த எங்களுக்கு அவர் எதுவும் செய்ய வில்லை. ஹரிதாஸுக்கு தினமும் ஒருவர் மதுவாங்கிக் கொடுக்க வேண்டும். மது வாங்கி கொடுக்க வில்லை யென்றால் எங்களைச் டார்ச்சர் செய்வார்.
மாமூல் தொகையில் எங்களுக்கு பங்கு கொடுக்காத தாலும் டார்ச்சர் காரணமாகவும் அவரைக் கொலை செய்யும் முடிவுக்கு சம்மதித்தேன்'' என்று வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்.
கைதான ரவுடி ஒருவர், `நாங்கள் அனைவரும் ஒரே டீம். எங்களை மீறி அம்பத்தூர் ரயில் நிலைய, மார்க்கெட் பகுதியில் நடைபாதை கடை வைக்க முடியாது.
தினமும் தண்டல் வசூலிப்பது போல மாமூல் வசூலித்து ஹரிதாஸிடம் கொடுப்போம். அப்போது அவர் எங்களுக்கு மதுவாங்கித் தருவார். மாமூல் தொகையில் பங்கு கேட்ட போது எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதனால் எங்களைக் கொலை செய்ய ஹரிதாஸ் திட்டமிட்ட தகவல் தெரிந்ததும் நாங்கள் முந்திக் கொண்டோம்' என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.
கொலை நடந்து 9 மணி நேரத்துக்குள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு, தனிப்படை போலீஸார் 8 பேரை கைது செய்ததை உயரதிகாரிகள் பாராட்டினர்.
Thanks for Your Comments