மகாராஷ்டிரா மாநிலம் தானேயில், பாதி எரிந்த நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக, கடந்த மாதம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், பாதி எரிந்த நிலையில் இருந்த உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
25 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் என்பதால், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப் பட்டாரா அல்லது
வேறு காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர்.
சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் ஒரு பை, வங்காள எழுத்து பொறிக்கப்பட்ட தாயத்தைக் கைப்பற்றினர். அந்தப் பையில் கோழி இறகுகள் இருந்துள்ளன.
அந்த இறகுகளை மோப்பம் பிடித்த காவல்துறை, அந்தப் பகுதியில் வங்காள மொழி பேசும் மக்கள் யார் என்ற விசாரணையில் இறங்கினர்.
அதேபோல், கோழிக்கடை நடத்தி வருபவர்கள் மீது ஒரு கண் வைத்திருந்தனர்.
அப்போது, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஆலம் ஷேக் என்ற நபர் கறிக்கடை நடத்தி வந்ததாகவும், கடந்த சில நாள்களாக அவர் தலை மறைவானதும் தெரிய வந்தது.
இளம் பெண் ஒருவர், அவரது கடைக்கு அடிக்கடி வருவதாகவும் காவல் துறைக்கு தெரிய வந்தது. இதனை யடுத்து, போலீஸ் டீம் மேற்கு வங்கம் விரைந்தது.
பிர்ஹம் மாவட்டத்தில் அந்த நபர் இருப்பதாகத் தகவல் வந்ததை யடுத்து, அங்கு சென்றனர். அந்த நபரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீஸாரின் விசாரணையில், கொலை செய்ததை ஆலம் ஒப்புக் கொண்டார். போலீஸாரிடம் அவர் அளித்த வாக்கு மூலத்தில், ``அந்தப் பெண் தன்னிடம் 2.50 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார்.
ஆனால், அதை திருப்பித் தராமல் காலம் கடத்தி வந்தார். இதனை யடுத்து, அவருடைய வீட்டுக்குச் சென்று பணத்தைத் திருப்பித் தருமாறு கூறினேன்.
அப்போது ஏற்பட்ட வாக்கு வாதத்தினால் ஆத்திரத்தில் அவரை கொலை செய்தேன்.
இதனையடுத்து, எனது நண்பரின் உதவியோடு இருசக்கர வாகனத்தில் உடலை எடுத்துச் சென்று தீயிட்டுக் கொளுத் தினேன்'' என்று தெரிவித்துள்ளார்.
Thanks for Your Comments