கடந்த டிசம்பர் மாதம், திருச்சி பிராட்டியூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் உமாசக்தி என்பவர் தலைமை யிலான போக்குவரத்து துறை அதிகாரிகள்,
திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் ஸ்ரீபாலாஜி ஆம்னி சர்வீஸ் என்கிற பெயரில் ஆம்னி பேருந்து வந்துள்ளது.
இப்பேருந்து தினமும் மதுரையி லிருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அதையடுத்து, அங்கு வந்த ஆம்னி பேருந்தை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.
அப்போது பேருந்தில் இருந்த ஆவணங்கள் அனைத்தும் போலியானது என்பதும், அந்த ஆம்னி பேருந்து சாலை வரி செலுத்தாமல் இயக்கப்பட்டு வந்ததும் தெரிய வந்தது.
மேலும், அதிகாரிகளின் தொடர் விசாரணையில், அந்தப் பேருந்து தூத்துக்குடி மாவட்டம், சுப்பிரமணிய புரத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மற்றும்
அவரின் சகோதரர் சுயம்பு ஆகியோர் சொந்தமாக இயக்கி வந்த ஶ்ரீ பாலாஜி சர்வீஸ் என்ற நிறுவனத்து க்குச் சொந்தமான பேருந்து அது என தெரிய வந்தது.
அதை யடுத்து அந்த ஆம்னி பேருந்தை, போக்குவரத்து துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து திருச்சி பிளாட்பார பிராட்டியூர் பகுதியில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைத்தனர்.
அப்படி நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்து கடந்த டிசம்பர் 31-ம் தேதியி லிருந்து காணவில்லை.
வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தப் பட்டிருந்த ஆம்னி பேருந்து மர்ம நபர்களால் திருடப்பட்டது தெரிய வந்தது.
இது குறித்து திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே உள்ள திருச்சி அமர்வு நீதிமன்றக் காவல் நிலையத் துக்குத் தகவல் கொடுக்கப்பட்டு அது குறித்து போலீஸாரால் வழக்கு பதிவு செய்யப் பட்டது.
ஆம்னி பேருந்து திருடப்பட்ட இடத்தில் பயன் படுத்தப்பட்ட செல்போன் எண்கள் குறித்து தொழில்நுட்ப உதவியுடன் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, திருடப்பட்ட ஆம்னி பேருந்து குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வந்தனர்.
தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணை யில், ஆம்னி பேருந்து திருடப்பட்ட இடத்தில் பயன் படுத்தப்பட்ட செல்போன் எண்கள் குறித்து தொழில்நுட்ப உதவியுடன் ஆய்வு செய்தனர்.
அதன் மூலம் கிடைத்த தகவலின் பேரில், திருடப்பட்ட ஆம்னி பேருந்து, கடந்த 4-ம் தேதி விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை பகுதியில் மறைத்து வைக்கப் பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து போலீஸார் பேருந்து உரிமை யாளர்களில் ஒருவரான சுயம்பு என்பவரைப் பிடித்து விசாரணை செய்த போது,
போக்குவரத்து அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட அந்த ஆம்னி பேருந்தை அவரும் அவரின் சகோதரர் ராமலிங்கமும் சேர்ந்து திருடியது தெரிய வந்தது.
இதை யடுத்து, சுயம்புவை போலீஸார் கைது செய்தனர். தலை மறைவாக உள்ள அவரின் அண்ணன் ராமலிங்கத்தை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
வாகன தணிக்கையில் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளிடம் சிக்கிக் கொண்ட ஆம்னி பேருந்து அதன் உரிமையாளர்கள்
ஸ்கெட்ச் போட்டு திருடிய சம்பவம் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
Thanks for Your Comments