நீங்கள் எப்பவும் ‘சில்’லென்று இருப்பது போல் உணருகின்றீர்களா? இந்தக் கேள்வியை யாராவது கேட்டாலோ (அ) ஆம்,
நாம் அவ்வாறு தான் உணருகின்றேன் என்று யாராவது பதில் சொன்னாலோ அக்னி நட்சத்திரம் நெருப்பாய் கொட்டும் இந்நேரத்தில் அவர்களைப் பார்த்தால் அடித்து விடலாம் என்பது போல் கோபம் வரும் தான்.
கர்ப்பம் வேண்டாம் செக்ஸ் வேண்டும் - எது சரி?ஆனால் அவர்கள் அவ்வாறு கூறுவதிலும் உண்மை இருக்கின்றது. அதற்கான மருத்துவ காரணங்களும் இருக்கின்றன. பொதுவில் ஆண்களை விட பெண்கள் சற்று கூடுதலாக இவ்வாறு கூறுவார்கள்.
ஹைப்போ தைராய்டிஸம்:
தைராய்டு சுரப்பி குறைவாக வேலை செய்தல், இதனை ஹைப்போ தைராய்டிஸம் என்று கூறுவார்கள். இந்த பாதிப்பு இருப்பவர்கள் சற்று ‘சில்’லென்றே எப்போதும் உணர்வார்கள்.
கருணைக்கிழங்கு கட்லெட் செய்வதுமேலும் வறண்ட சருமம், சோர்வு, மலச்சிக்கல், எடை கூடுதல் போன்ற அறிகுறி களையும் உடையவர்க ளாக இருப்பார்கள்.
ரத்த சோகை:
தேவையான அளவு சிகப்பணுக்கள் இல்லை என்றால் ஆக்ஸிசனை உடல் முழுவதும் எடுத்துச் செல்வதில் பாதிப்பு ஏற்படும்.
குறிப்பாக கை, கால்களில் ரத்த ஓட்ட குறைபாடு ஏற்படும். சிலர் எப்பொழுதும் கை, கால்கள் சில்லென்று இருக்கின்றது எனக் கூறுவர்.
குறிப்பாக கை, கால்களில் ரத்த ஓட்ட குறைபாடு ஏற்படும். சிலர் எப்பொழுதும் கை, கால்கள் சில்லென்று இருக்கின்றது எனக் கூறுவர்.
ரேருல்ட் பாதிப்பு:
இதுவும் கை, கால் விரல்களில் ரத்த ஓட்ட குறைபாடால் ஏற்படும் பாதிப்பு. விரல்களில் வீக்கமும், சில்லென்ற உணர்வும் இருக்கும். சில நேரங்களில் கை, கால் வெளிர்ந்தும், லேசான நீல நிறம் கொண்டும், மரத்தும் இருக்கும்.
போதுமான தூக்கமின்மை:
போதுமான தூக்கமின்மை உடலில் சூட்டினை இழக்கச் செய்யும். 7-8 மணி நேர தூக்கம் மிக அவசியம்.
ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு:
இதன் காரண மாக ரத்த ஓட்டத்தில் குறைபாடுகள் ஏற்பட்டு கை, கால்கள், தலை போன்ற உறுப்புகளில் சில்லென்று உணர்வு ஏற்படலாம்.
கருத்தரிக்க முடியாமல் போக காரணம்? கருத்தரிக்க உதவும் உணவுகள் !மேலும் இத்தகைய அடைப்புகள் ஏற்படும் பொழுது புண், அடிபட்ட காயம் இவை மெதுவாய் ஆறுதல், கால், பின்புறம் மரத்து போகுதல், கால் நகங்களின் வளர்ச்சி குறைவாய் இருத்தல் போன்ற குறைபாடுகளும் இருக்கும்.
* சர்க்கரை நோயும் சீரான ரத்த ஓட்டமில்லாத குறைபாடு களை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. இது நரம்புகளையும் பாதிக்கும் தன்மை கொண்டது.
அதிக சோர்வு, அதிகம் சிறுநீர் செல்லுதல், கலங்கிய பார்வை, அதிக தாகம் இவையும் சர்க்கரை நோயின் குறைபாடுகள் ஆகும்.
அதிக சோர்வு, அதிகம் சிறுநீர் செல்லுதல், கலங்கிய பார்வை, அதிக தாகம் இவையும் சர்க்கரை நோயின் குறைபாடுகள் ஆகும்.
* வைட்டமின் பி குறைபாடு ரத்த சோகையினை ஏற்படுத்தும். இதன் காரணமாக கை, கால்களில் ‘சில்’லென்ற உணர்வு ஏற்படலாம்.
ஆக மேற்கூறிய அறிகுறிகள் இருந்தால் உடனடி மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என்பதனை நன்கு அறிய வேண்டும்.