அமெரிக்காவில் பொம்மை துப்பாக்கியால் பறிபோன சிறுமியின் உயிர் !

0
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த வெள்ளிக் கிழமையன்று 17வயது சிறுமி போலீசாரால் சுடப்பட்டார். 
அமெரிக்காவில் பொம்மை துப்பாக்கியால் பறிபோன சிறுமியின் உயிர் !
காவல் துறையின் வாகனத்தின் மீது மோதவிட்டு சென்றதாக வும் போலீஸாரை நோக்கி துப்பாக்கியை காட்டியதால் சிறுமி சுடப்பட்ட தாக தெரிவிக்கப் பட்டது.

இந்நிலையில் சிறுமி பயன் படுத்தியது பொம்மை துப்பாக்கி என்றும் காவலர்களின் கவனக் குறைவால் இந்த சம்பவம் நடந்துள்ள தாகவும் சிறுமியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி யுள்ளன. அந்த வீடியோ பதிவில் வாகனம் மோதியதற் கான ஆதாரங்கள் இல்லை. 
ஆனால் சிறுமி காவலர்களை நோக்கி துப்பாக்கியை காட்டுவது காவலர்கள் சுடுவதும் பதிவாகி யுள்ளது. இரண்டு முறை காவலர்களால் சுடப்பட்டு தரையில் வீழ்ந்து விட்டார். 

அதன் பின்னர் காவலர்கள் சிறுமியை தரையில் கிடத்தி கைவிலங்கு பூட்டுகின்றனர். அப்போது காவலர்களிடம், `என்னால் மூச்சு விட முடிய வில்லை.. 
தயவு செய்து என்னை காப்பாற்றுங்கள்.. என்னால் சுவாசிக்க முடிய வில்லை காப்பாற்றுங்கள்’ எனக் கதறுகிறாள். உடனடியாக காவல் துறையினர் சிறுமிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க ஆரம்பித்தனர். 

எங்கே குண்டு அடிபட்டது எனக் கேட்கவே, இடது கால் மற்றும் மார்பு பகுதிகளில் குண்டு தாக்கிய தாகக் கூறுகிறாள் அந்த சிறுமி. 

அங்கு சிறுமிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கின்றனர். அங்கிருந்து மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் போது அவர் உயிரிழந்து விட்டார். 

இந்த வீடியோ விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது. சிறுமி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். 
அமெரிக்காவில் பொம்மை துப்பாக்கியால் பறிபோன சிறுமியின் உயிர் !
தன்னை காப்பாற்றுங்கள் மூச்சு விட முடிய வில்லை எனக் கூறும் போது கைவிலங்கு பூட்டுவது சரியா என சிறுமியின் உறவினர்கள் கேள்வி எழுப்பி யிருந்தனர். 

இது தொடர்பாக காவல் துறையினர் அளித்த விளக்கத்தில், அத்தகைய சூழ்நிலையில் குறிப்பிட்ட நபருக்கு கை விலங்கிடுவது வழக்கமான நடைமுறை தான் எனத் தெரிவித் துள்ளனர்.
சிறுமி சுடப்பட்டு 90 நிமிடங் களுக்கு பிறகு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. 

எதிர் முனையில் இருக்கும் நபர், தனது மகள் எங்களது அனுமதியின்றி காரை எடுத்துக் கொண்டு வெளியில் சென்று விட்டாள். 
அவள் உடல்நலம் பாதிக்கப் பட்டவள் மருந்து உட்கொண்டு வருகிறாள் என தெரிவித்துள்ளார். சிறுமி அடை யாளங்களை கூறியுள்ளார். 

அதன் பின்னர் தான் தனது மகள் காவலர்க ளால் சுடப்பட்ட செய்தி சிறுமியின் குடும்பத்தி னருக்கு தெரிய வந்துள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings