அந்த 30 நிமிடங்கள்.. - ரோகித் ஷர்மா உருக்கம் !

0
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - நியூசிலாந்து இடையிலான அரையிறுதி ஆட்டம் 9ம் தேதி மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் சேர்த்தது.
அந்த 30 நிமிடங்கள்.. - ரோகித் ஷர்மா உருக்கம்



மழை குறுக்கிட்டதால் மறு நாள் (10ம் தேதி) ஆட்டம் ரிசர்வ் செய்யப்பட்டது. இதனை யடுத்து 240 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி நேற்று களம் இறங்கியது.

கடைசி ஓவரில் சாஹல் ஆட்டமிழக்க இந்தியா 49.3 ஓவரில் 221 ரன்கள் அடித்து ஆல்அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இந்திய அணியின் தோல்வியின் சோகத்தில் இருந்து இந்திய கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் என இன்னமும் யாரும் மீளவில்லை. இந்த தோல்வி குறித்து இந்திய அணியின் ரோகித் ஷர்மா வருத்தமான பதிவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



அவர் பதிவில், ‘ஒரு டீமாக இணைந்து செயல்பட தவறிவிட்டோம். 30 நிமிடங்கள் மோசமாக விளையாடியதே உலக கோப்பை இந்திய அணியை விட்டுப்போக மிகப்பெரிய காரணம். எனது இதயம் கனத்து விட்டது. உங்கள் இதயங்களும் அப்படித் தான் என எனக்குத் தெரியும்.

இந்தியாவை தாண்டி வெளியில் இருந்து (இங்கிலாந்து) கிடைக்கும் ஆதரவு நம்பமுடியாத ஒன்றாகும். நாங்கள் விளையாடிய இடத்தில் எல்லாம் நீல நிறத்தை வரைந்த இங்கிலாந்திற்கு எங்கள் நன்றி’ என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings