மாநகராட்சி அலுவலகத்தை சினிமா ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றிய அலுவலர்க ளால் தெலங்கானா வில் பரபரப்பு ஏற்பட்டது. தெலுங்கானா மாநிலம் கம்மம் மாநகராட்சி அலுவலக அதிகாரிகள் பணி நேரத்தில் டிக் டாக் வீடியோ எடுத்து அதை சமூக வலைத் தளங்களில் வெளியிட்டது.
அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. மாநகராட்சி அலுவலக த்தில் பிறப்பு / இறப்பு உள்ளிட்ட சான்றிதழ்கள் வழங்கும் பிரிவில் அனிதா, ஜோதி, வீரன்னா, ரவி ஆகியோர் அலுவலர்க ளாக பணியாற்றி வருகிறார்கள்.
நாளொன்றுக்கு நூற்றுக் கணக்கானோர் சான்றிதழ் களுக்காக விண்ணப்பித்து அதை வாங்கி செல்வதற்காக மாநகராட்சி அலுவலக த்தில் காத்திருக்கும் நிலையில், பணியின் போதே மும்முரமாக டிக் டாக் வீடியோ எடுத்து அதை வெளியிட்டார் அனிதா என்ற அலுவலர்.
இது சமூக வலை தளங்களில் வேகமாக பரவ, விஷயம் தெலுங்கானா முதலமைச்சர் வரை சென்று விட்டது. சமூக ஆர்வலர்களும், இளைஞர் களும் மாநகராட்சி அலுவலக த்தில் நடந்த இந்த சம்பவத்தை இணையத்தில் வறுத்து எடுத்து விட்டனர்.
இதை யடுத்து கம்மம் மாநகராட்சி ஆணையர் துறை ரீதியான நடவடிக்கை எடுத்துள்ளார். இதனிடையே அரசு அதிகாரி களும், ஊழியர்களும் தங்களுக்கு உள்ள கடமையையும், பொறுப்பையும் உணர்ந்து செயல்பட வேண்டும் என தெலுங்கானா அரசு அட்வைஸ் செய்துள்ளது.
டிக்டாக் பண்ணுங்க.. வீட்டில் வச்சு பண்ணுங்க.. ஜாலியா பண்ணுங்க.. வேலையை விட்டுட்டு பண்ணினா எப்படிம்மா.. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா!
Thanks for Your Comments