உலகக் கோப்பை கனவு க்ளோஸ் - கோலி சொல்லும் லாஜிக் !

0
இந்த முறை கப் எப்படியும் நமக்கு தான்' என்று எக்கச்சக்க எதிர் பார்ப்புகளுக்கு மத்தியில் அரை யிறுதிக்குச் சென்ற இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்திடம் தோல்வி யடைந்து தொடரை விட்டு வெளியேறி யுள்ளது. 
கோலி சொல்லும் லாஜிக்



லீக் போட்டிகளில் பிரமாதமாக ஆடி டேபிள் டாப்பராக முதல் இடம்பிடித்த இந்தியா அரை இறுதியில் நியூஸிலாந்திடம் தோல்வி யடைந்திருக் கிறது. பாண்டியா, பன்ட் இருவரும் கிட்டத்தட்ட ஆளுக்கு 10 ஓவர்கள் ஆடி 30-களில் அவுட் ஆனது இந்தியாவின் வெற்றி வாய்ப்பைப் பறித்திருக் கிறது. 
நியூஸிலாந்தின் அசத்தல் பௌலிங், ஃபீல்டிங் ஆகியவை இந்திய அணி தோல்வியைச் சந்திக்க வைத்தது என்று சொல்லலாம். உலகக் கோப்பை கனவு தகர்ந்ததால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதற்கிடையே போட்டிக்குப் பிறகு பேசிய இந்திய கேப்டன் விராட் கோலி, ``முதல் இன்னிங்ஸில் பேட்டிங், பௌலிங் என அனைத்திலும் நாம் சிறப்பாகவே செயல் பட்டோம். அப்போது என்ன தேவையோ அதை வீரர்கள் சரியாகவே செய்தனர். குறைந்த இலக்கில் நியூஸிலாந்தைச் சுருட்டி விட்டதாகவே நினைத்தோம். 

ஆனால், அதன்பிறகு விளையாடிய முதல் அரை மணி நேரத்தில் வித்தியாசத்தை ஏற்படுத்தியது. நேற்றைய ஆட்டத்தை நினைத்து நாம் பெருமைப் படலாம். அந்த அளவுக்கு நன்றாகத் தான் விளையாடினோம். அந்த உத்வேகத்துடன் தான் காலையில் இருந்தோம்.

அதைத் தகர்த்த பெருமை நியூஸிலாந்து பௌலர்களுக்கு தான் சேரும். புது பந்தில் சரியான ஏரியாக்களில் பந்துவீசி நன்றாகவே செயல் பட்டார்கள். எங்களை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கி வெற்றி கண்டனர். 

இந்த வெற்றிக்கு அவர்கள் தகுதியான அணியே. பந்தை நன்றாக ஸ்விங் செய்து தனித்துவமாக வீசி வெற்றியை நம்மிடமிருந்து பறித்தனர். 
உலகக் கோப்பை கனவு க்ளோஸ்



இதற்கு உரிய பாராட்டுகள் அவர்களுக்குச் சேர வேண்டும். நாங்கள் தான் ஷாட் தேர்வில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி யிருக்க வேண்டும். 45 நிமிட மோசமான கிரிக்கெட்டால் தொடரிலிருந்து இப்போது வெளியேறி இருக்கிறோம்.
இது மிகவும் கடினமான ஒன்றே. இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை தான். ஆனால் நாக் அவுட் போட்டிகள் என்று வந்து விட்டால் எந்த அணி வேண்டு மானாலும் வெற்றி பெறலாம். அதற்கேற்ப நியூஸிலாந்து திட்டமிட்டு விளையாடியது. ஜடேஜா இரு போட்டிகளிலும் நன்றாகவே விளை யாடினார். 

தோனியும் அவர்கூட சேர்ந்து நன்றாகவே பாட்னர்ஷிப் அமைத்தார். இது குறைந்த ரன்களில் தோற்ற இன்னொரு மேட்ச். அதே போல் தான் தோனியின் ரன் அவுட்டும். இந்தத் தொடரில் முக்கியமானது ரசிகர்களின் ஆதரவு. மிகப்பெரிய அளவில் வந்து எங்களுக்கு ஆதரவு தந்தனர். அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்" எனப் பேசினார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings