உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரரான ரோகித் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இது வரை ஐந்து சதங்கள் விளாசி ஒரு உலக கோப்பையில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் நான் சரியாக விளையாட வில்லை. அப்போது யுவராஜ் சிங்கிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் கொடுத்த ஊக்கமே இந்த ரன் குவிப்புக்கு காரணம் என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரோகித் சர்மா கூறுகையில் ‘‘ஐபிஎல் தொடரில் நான் சரியாக ரன்கள் அடிக்க வில்லை. யுவராஜ் சிங்கை நான் எப்போதுமே மூத்த சகோதரராக நினைப்பவன். ஆகவே, அவருடன் கிரிக்கெட் மற்றும் வாழ்க்கை குறித்து பேசிக் கொண்டிருப்பேன்.
அப்போது ரன் குவிக்காதது குறித்து பேசினேன். உடனே அவர் என்னிடம், நீ ரன்கள் குவிப்பாய் என்று கூறினார். அவர் அப்போது கூறியது உலக கோப்பையை மனதில் வைத்துதான் என்று நினைக்கிறேன்.
ஐபிஎல் தொடரின்போது பொதுவாகவே போட்டி குறித்து பேசுவோம். 2011 உலக கோப்பை தொடருக்கு முன் யுவராஜ் சிங் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடிக்கவில்லை. ஆனால் உலக கோப்பையில் அசத்தினார்.
அதை மனதில் வைத்து என்னிடம் அவர் கூறினார். அதை நான் உலக கோப்பையில் செய்து முடித்தேன். எவ்வளவு ரன்கள் அடிக்கிறோம், எவ்வளவு விக்கெட்டுக்கள் வீழ்த்துகிறோம் என்பது முக்கியமல்லை. கோப்பையை கைப்பற்று கிறோமா? என்பதே முக்கியம்’’ என்றார்.
Thanks for Your Comments