1 கிலோ தேயிலைத் தூள் 50,000 ரூபாய் - என்ன ஸ்பெஷல்?

0
இந்தியர் களுக்குப் புத்துணர்ச்சி அளிக்கும் பானம் என்றால் உடனடியாக நினைவுக்கு வருவது டீ தான். இங்கே பலர் காலையில் எழுந்தவுடன் டீ குடித்து விட்டுதான் அடுத்த வேலையையே பார்ப்பார்கள். 
தேயிலை



அனைத்துத் தரப்பு மக்களும் வாங்கிப் பயன்படுத்தும் வகையில் தான் தேயிலைத் தூள் விலையும் இருக்கும்.

ஒரு கிலோ தேயிலைத் தூள்

நிலைமை இப்படி யிருக்க இதே இந்தியாவில் தான் ஏலம் ஒன்றில் ஒரு கிலோ தேயிலைத் தூள் 50,000 ரூபாய் கொடுத்து வாங்கப் பட்டிருக்கிறது. வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாம் இந்தியாவில் தேயிலை உற்பத்தியாகும் இடங்களில் முதன்மை யானதாக இருக்கிறது. 
அங்கே கவுஹாத்தி தேயிலை ஏல மையத்தில் நேற்று ஏலத்துக்கு வந்தது மனோகரி கோல்டு என்ற தேயிலைத் தூள். அப்போது மனோகரி கோல்டு தேயிலைத் தூள் ஒரு கிலோ 50,000 ரூபாய்க்கு ஏலம் போயிருக்கிறது.

தேயிலை

இந்தத் தேயிலை இவ்வளவு விலை கொடுத்து வாங்கப் படுவதற்கான காரணம் இதன் தனித்தன்மை தான். மற்ற தேயிலை வகைகளைப் போல இது அதிக அளவில் கிடைப்ப தில்லை.
புத்துணர்ச்சி அளிக்கும் பானம்



மனோகரி தேயிலைத் தோட்டம் என்ற நிறுவனம் தான் இந்தச் சிறப்பு வாய்ந்த தேயிலையை உற்பத்தி செய்கிறது. இந்த நிறுவனத்து க்குச் சொந்தக் காரரான ராஜன் லோஹியாவுக்கு மூன்று தேயிலைத் தோட்டங்கள் இருக்கின்றன. 

அவற்றிலிருந்து வருடத்துக்கு 25 லட்சம் கிலோ அளவுக்குத் தேயிலைத் தூள் கிடைக்கிறது.

தேயிலைத் தோட்டம்

ஆனால் மனோகரி கோல்டு எனப்படும் சிறப்பு வகை மட்டும் தேயிலை சில கிலோக்கள் தான் கிடைக்கிறது. "பொது ஏலத்தில் ஒரு கிலோ தேயிலைத் தூள் இவ்வளவு விலைக்கு வாங்கப் படுவது இதுவே முதல் முறை" என கவுஹாத்தி தேயிலை ஏல மையத்தின் செயலாளர் தினேஷ் பிஹானி தெரிவித்தி ருக்கிறார். 
கடந்த வருடம் மனோகரி கோல்டு ஒரு கிலோ 39,001 ரூபாய்க்கு ஏலம் போனது. இப்போது அதை விடக் கூடுதலாக ஏலத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது.

தேயிலை

மனோகரி கோல்டு தேயிலைத் தூள் வழக்கமான தேயிலையைப் போல இலைகளி லிருந்து தயாரிக்கப் படுவதில்லை. மாறாக மொட்டுகளி லிருந்து தயார் செய்யப் படுகின்றன. அதற்கென குறிப்பிட்ட காலம், செடி வகை எல்லாம் உண்டு.
மனோகரி கோல்டு



மே மற்றும் ஜூன் மாதத்துக்கு இடைப்பட்ட காலத்தில் அதிகாலை நேரத்தில் P-126 வகை தேயிலைச் செடிகளி லிருந்து மட்டுமே மனோகரி கோல்டு தேயிலைத் தூளுக்குத் தேவையான மொட்டுகள் சேகரிக்கப் படுகின்றன.
மனோகரி கோல்டு

அதன் பின்னர் வழக்கமான இயந்திரங்கள் போல இல்லாமல் இவை கைகளால் பதப்படுத்தப் பட்டு தயார் செய்யப் படுகின்றன. 
இந்த வருடம் வானிலை சாதகமாக இல்லாத காரணத்தால் இந்த வருடம் 5 கிலோ மனோகரி கோல்டு தேயிலைத் தூள் மட்டுமே உற்பத்தி செய்யப் பட்டுள்ளதாக ராஜன் லோஹியா தெரிவித் திருக்கிறார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings