அபுதாபியில் உலகில் முதன் முறையாக எரிபொருட்களுக்கு பதிலாக செடியில் இருந்து தயாரிக்கபட்ட பயோ பியூல் கொண்டு விமானம் இயக்கப் படுகிறது.
உலக நாடுகள் பலவும் எரிசக்தியில் கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக பெட்ரோலியம் அல்லாது சூரிய ஒளி மின்சாரம் என புதிய தொழில் நுட்பங்களை அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது.
இதில் புதிதாக அபுதாபியில் ஸ்மாட் சிட்டி எனப்படும் மஸ்தார் சிட்டியில், அரசு சார்பில் அமைக்கபட்டு வரும் தொழில்நுட்ப பூங்காவில், புதிய கண்டு பிடிப்புகள், மாற்று எரிசக்தியால் இயங்கும் தொழில்நுட்பம் என அனைத்தும் இங்கு தான் உருவாக்கப் படுகிறது.
இந்த வளாகத்தில் பயிரிடப்படும் சாலிக்கோர் செடியிலிருந்து தான் விமானத்திற்கு தேவையான எரிப்பொருள் தயாரிக்கப் படுகிறது.
அது என்ன சாலிகோர்னியா? தெரியாத பெயராக இருப்பதாக நினைக்க வேண்டாம். இதுவும் நமது கிராமங்களில் கிடைக்கும் ஒருவகை மூலிகை செடி தான்.
ஆம், இதனை தண்ணீர் விட்டான் செடி என்று ஊர் புறங்களில் கூறுவர். இதை தான் ஆங்கிலத்தில் சாலிகோர்னியா என்று அழைக்கின்றனர்.
அமீரகத்தில் முதன் முதலாக துபாயில் உள்ள சர்வதேச பயோசலைன் வேளாண்மை மையத்தில், சாலிகோர்னியா செடிகளை வளர்த்து சாகுபடி செய்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அபுதாபியில் உள்ள மஸ்தார் நகரில், இரண்டு ஏக்கர் பரப்பளவில் பயிரிட பட்டது சாலிகோர்னியா. இந்த தாவாரம் தண்டு அமைப்பை உடையது.
பொதுவாக இவை வறண்ட நிலத்திலும், உப்புநீர் உள்ள பகுதியிலும், இயற்கை யாக காணப்படும். இதில் இருந்து பெறப்படும் திரவம், காய்ச்சி வடித்தல் முறையில் எரிபொருளாக மாற்றப் படுகிறது.
இதிலிருந்து பெறப்படும் எரிபொருள், அதிக செயல் திறனும், குறைந்த புகை யினையும் வெளி யிடுவதாக உள்ளது. உலகில் முதன் முறையாக, எதிகாத் விமான நிறுவனம், இந்த எரிப்பொருளை பயன்படுத்தத் தொடங்கி யுள்ளது.
அபுதாபியில் இருந்து நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகருக்கு செல்லும், போயிங் 787 ரக விமானத்தில் இந்த பயோ எரிபொருள் பயன் படுத்தப்பட்டு வெற்றி கரமாக பயணம் செய்துள்ளது.
ஜனவரி மாதம் 16-ந் தேதி இந்த சாதனை நிகழ்த்த பட்டுள்ளது. இதன் காரணமாக, அமீரகத்தில் வரும் காலத்தில், உணவு மற்றும் எரிப்பொருள் துறையில் மாற்றம் ஏற்படலாம் என்று எதிர் பார்க்க படுகிறது.
தமிழகம் மற்றும் கேரளாவில், இயற்கை மருத்து வத்திற்காக சாலிகோர்னியா வளர்க்கப் படுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.
Thanks for Your Comments