கடந்த சில வருடங்களாக இயற்கையின் மீதான கவனிப்பும், அதன் பாதுகாப்பும் முக்கிய பேசுபொருளாக மாறி யிருக்கிறது.
பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்ப மடைதல் காரணமாக உண்டாகும் பிரச்னைகள் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி யிருக்கின்றன.
இதிலிருந்து மனித குலத்தைக் காக்கவும், அடுத்த தலைமுறை க்கு ஒரு நல்ல வாழ்வை ஏற்படுத்தவும் பல்வேறு தரப்பு களிலிருந்தும் முயற்சிகள் மேற்கொள்ள ப்பட்டு வருகின்றன.
இதில் ஈடுபட்டு வரும் பலரின் முக்கிய நோக்கமாக இருப்பது பிளாஸ்டிக் ஒழிப்பும் மரங்களை நடுவதும் தான். அந்த வகையில் புதுவரவு இந்த மூங்கில் பாட்டில்.
மக்களின் அன்றாட வாழ்வில் இருந்து பிளாஸ்டிக் பயன்பாட்டை ஓரளவுக்காவது குறைக்க வேண்டும் என்ற அடிப்படையில் அசாமைச் சேர்ந்த தொழில் அதிபர் திரிட்மான் போரா இந்த மூங்கில் பாட்டிலை உருவாக்கி யிருக்கிறார்.
பார்த்தவுடனே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. அந்தளவுக்கு வசீகரமாக இதை டிசைன் செய்திருக்கி றார்கள்.
இதற்காக போரா 17 வருடங்கள் ஆய்வு செய்திருக்கிறார் என்பது இதில் ஹைலைட். 100 சதவீதம் தண்ணீர் லீக் ஆகாது என்பது இதன் சிறப்பு.
இது முழுக்க முழுக்க மூங்கில் பட்டைகளால் தயாரிக்கப்பட்ட ஓர் ஆர்கானிக் பொருள் என்பது குறிப்பிடத் தக்கது.
இதன் மேற்புறத்தை வாட்டர்ப்ரூஃப் ஆயில் மூலம் பாலிஷ் செய்திருக்கி றார்கள். அதனால் கண்ணாடி போல மின்னுகிறது இந்த மூங்கில் பாட்டில்.
இதில் ஆச்சர்யம் என்ன வென்றால் தண்ணீர் லீக் ஆகாமல் இருப்பதற் காகப் பொருத்தப்படும் கார்க் கூட மூங்கிலில் தான் செய்திருக்கி றார்கள்.
கடுமையான வெயில் காலத்தில் கூட தண்ணீரை குளிர்ச்சியாக வைத்திருக் கிறது இந்த பாட்டில்.
கட்டிங், பாய்லிங், டிரையிங், ஸ்மோக்கிங், ஜாய்னிங் என ஒரு பாட்டிலை உருவாக்க நான்கு முதல் ஐந்து மணி நேரம் ஆகிறது.
இ-காமர்ஸ் இணைய தளங்களில் கிடைக்கி றது. விலை ரூ. 400- ரூ.600. நன்றி குங்குமம்..
Thanks for Your Comments