அமேசன் காடுகளில் பற்றி எரியும் தீ... இராணுவத்தை களமிறக்கும் பிரேசில் !

0
அமேசன் காடுகளில் பற்றி எரியும் தீயை அணைக்க பிரேசில் தீவிர முயற்சி மேற்கொண் டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் 44 ஆயிரம் இராணுவத் தினர் ஈடுபடுத்தப் படுகின்றனர்.
அமேசன் காடுகளில் பற்றி எரியும் தீ... இராணுவத்தை களமிறக்கும் பிரேசில் !
உலக அளவில் பிரபலமானது அமேசன் காடுகள். இக்காட்டில் அரிய வகை மரங்கள், உயிரினங்கள், அபூர்வ விலங்கினங்கள், பூச்சிகள் உள்ளன. 

பிரேசில், கொலம்பியா, வெனிசுலா, பொலிவியா, கயானா ஆகிய நாடுகளில் இக்காடுகள் பரவியுள்ளன. உலகிற்கு தேவையான ஒட்சிசனில் 20 சதவீதம் அமேசன் காடுகள் மூலம் கிடைக்கிறது.
இக்காட்டின் அதிக அளவிலான பகுதி பிரேசில் நாட்டில் உள்ளது. 3 வாரங்களு க்கு முன் அமேசன் காட்டில் தீ பற்றியது. 

மளமளவென காட்டுத் தீ பரவியது. இதனால், பல கி.மீ தூரத்துக்கு தீ பரவி புகை மண்டலமாக காட்சி யளிக்கிறது. 
பல உயிரினங்கள், தாவரங்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ள தால் தீயை அணைக்க சுற்றுச் சூழல் அமைப்புகளும் உலக நாடுகளும் வலியுறுத்து கின்றன.

காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் பிரேசில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் 44 ஆயிரம் இராணுவ வீரர்களை ஈடுபடுத்த உள்ளதாக பிரேசில் அரசு அறிவித்துள்ளது.

இவர்கள் தீயை முற்றிலும் அணைக்கும் பணியில் ஈடுபடுவார்கள் என்றும் முதல் கட்டமாக 700 வீரர்கள் அனுப்பப் பட்டுள்ளதாகவும் பிரேசில் இராணுவ அமைச்சர் பெர்னாண்டோ அசி வீடோ தெரிவித் துள்ளார்.
இதனிடையே, அமேசன் காட களில் எரியும் தீயை அணைக்க ஜி 7 நாடுகள் உதவி செய்யும் என்றும் 
விரைவில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரான் தெரிவித் துள்ளார். அமேசன் காடு உலகின் நுரையீரல் என்றும் அக்காட்டில் தீ ஏற்பட் டுள்ளது 

கவலை அளிப்பதாகவும் விரைவில் தீ அணைய 130 கோடி கத்தோலிக்க மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும் போப் பிரான்சிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings