அறுவை சிகிச்சையின்றி இதய சிகிச்சை !

0
மருத்துவ தொழில் நுட்பங்களின் நூதன முறைகளை கையாளப் படுவது குறித்து ஏற்கனவே பார்த்து வருகிறோம். குறிப்பாக இதயநோய் சிகிச்சை முறையில் கணக்கிலடங்கா சாதனைகளை நிகழ்த்தி வருகிறது விஞ்ஞானம். 
க்ரையோகார் - Cryocor



முன்பெல்லாம் சாதாரண மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை என்றால் கூட மருத்துவர்கள் மேற்கொள்ளும் முயற்சி, சிகிச்சைக்குட் படுபவரின் நிலை, அதற்காகும் நாட்கள், உறவினர் களின் பதட்டம் இப்படியாக யிருந்த இவைக ளெல்லாம் சாதாரணமாக தடுப்பு ஊசி போட்டுக் கொள்வது போல் ஆகி விட்டது. 

எவ்வளவுக் கெவ்வளவு மக்களின் சிரமங்கள், பண விரயம், கால விரயம், பதட்டம், சிகிச்சை முறை கருவிகள் இவைகளை குறைத்து மருத்துவ சிகிச்சை களையும், அறுவை சிகிச்சை முறை களையும் எந்த அளவிற்கு எளிதாக்க முடியுமோ அந்தளவிற்கு சுலபமாக்கி விட்டது

இன்றைய நவீன விஞ்ஞானம். இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் இரண்டு சக்கர வாகனத்தை வேகமாக ஓட்டுகின்றனர். கனமான பொருட்களை தூக்குகின்றனர், கனரக தொழிற் சாலைகளில் வேலை செய்கின்றனர்.
அமெரிக்கா வின் சான்டீகோ நகரில் க்ரையோகார் (Cryocor) என்ற மருத்துவ நிறுவனம் க்ரையோ பிளாட்டர் என்ற ஒரு நூதனக் கருவியை கண்டு பிடித்துள்ளது. 

இக்கருவியின் மூலம் சீரற்ற இதய துடிப்பு மற்றும் இதயத்தில் ஏற்படும் அரித்மியா (Arrhythmia) என்றழைக் கப்படும் குருதி ஊட்டக்குறை நோயை குணப்படுத்த முடியும் என்று கண்டறிந் துள்ளார்கள். 

பெரும் பாலான அமெரிக்கர்கள் இந்நோய்க் குள்ளாகி யிருக்கின்றனர். க்ரையோகார் நிறுவனம் 2007-ல் இக்கருவியின் சோதனைக்கு அமெரிக்க அரசின் உணவு மற்றும் மருந்தியல் நிர்வாகத்திற்கு இதன் விபரங்களை சமர்ப்பித் துள்ளனர். 

அரித்மியா என்றழைக்கப் படும் இந்த குருதி ஊட்டக்குறை இதயத்தில் இரத்தம் உறைந்து விடுவதாகும். இதன் காரணமாக இதய தாக்கம் (Heart Stroke) ஏற்பட வாய்ப்புள்ளது. 

க்ரையோகார் தொழில் நுட்பம் ஐரோப்பாவில் அங்கீகரிக் கப்பட்டு 2002 -லிருந்து செயல் முறையில் உள்ளது. 800 நோயாளிகள் இதுவரை சிகிச்சை அளிக்கப் பட்டுள்ளனர்.
க்ரையோ பிளாட்டர்



குருதி ஊட்டக்குறை அல்லது சீரற்ற இதயத்  துடிப்பு இவைக ளினால் இதய தசைகள் பாதிப்படைந்து விடுகின்றன. இதனால் இதய தாக்கம் (Heart Stroke) ஏற்படுகிறது. இதயத்தின் துடிப்பு இதயத்தினுடைய மின் தூண்டுதல் முறைகளினால் ஏற்படுகிறது. 

இதனால் இதயத் தமனி, இதய அறை, தசைகளில் சுருங்கி விரியும் தன்மை ஏற்படுகிறது. இதனால் இதயத் திற்கும், இதயத்தி லிருந்து உடலின் மற்ற பாகங்களு க்கும் சீரான இரத்த வினியோகம் நடைபெறுகிறது. 

குருதி ஊட்டக்குறை ஏற்படும் போது இந்த இதயத்தின் மின் தூண்டுதல் முறையில் சிக்கல் ஏற்படுகிறது. இது சீரற்று இயங்க ஆரம்பித்து விடுகிறது. இதனால் இரத்தம் உறைய ஆரம்பித் துவிடுகிறது. 

இதற்கு தற்பொழுது மருந்துகள், அறுவை சிகிச்சைகள், ரேடியோ அலை இவைகளை பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப் படுகிறது. ரேடியோ அலை முறையி னால் வெப்பம் ஏற்படுத்தப்பட்டு இதயத்தில் பாதிப்பு ஏற்பட்ட திசுவை மட்டும் அகற்றப் படுகிறது.
அறுவை சிகிச்சை முறை மற்றும் ரேடியோ அலை சிகிச்சை முறைகளுக்கு சில சிரமங்களை மேற்கொள்ள வேண்டி யிருக்கிறது. மயக்க மருந்து (குளோரோ பார்ம்), மார்பகத்தை அறுவை சிகிச்சைக் காக திறக்க வேண்டிய சிக்கலான நிலைகள் ஏற்படுகிறது. 

மருந்துகளை உபயோகிப்பதால் சில பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. ஆனால் க்ரையோகார் முறையில் விஞ்ஞானிகள் பல்வேறு நூதன முறைகளை உபயோகப் படுத்தி யுள்ளனர்.
மயக்க மருந்து - குளோரோ பார்ம்



க்ரையோ ப்ளேட்டர் கருவியின் மூலம் நூதன சிகிச்சை முறையில் வளைந்து செல்லக்கூடிய குழலை (Flexible Tube) உட்செலுத்தி இதயம் குருதி ஊட்டக் குறை பாதித்த திசுவை -90 டிகிரிக்கு கீழ் குளிர்படுத்தப் படுகிறது. 

இதனால் பாதிப்படைந்த திசு அழிக்கப் படுகிறது. இதனால் இதய அறைகளில் சீரான நிலை ஏற்படுகிறது. 

"இம்முறைக்கு நோயாளிக்கு மயக்க மருந்து கொடுக்கத் தேவை யில்லை வலி போன்ற உபாதைகளும் ஏற்படுவ தில்லை'' என்று சான்டீகோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக இதய நோய் பிரிவு தலைவர் டாக்டர் கிரேக் ப்ளெட் கூறுகிறார்.
பாதகத்தையும் சாதகமாக்கும் வல்லமை படைத்த விஞ்ஞானம் நாளுக்கு நாள் புரட்சியை செய்து கொண்டு தான் இருக்கிறது. 

மிகப்பெரிய கருவிகளை நாள் கணக்கில் பதட்டத்துடன் மேற்கொள்ள வேண்டிய மருத்துவ சிகிச்சை களை யெல்லாம் சில மணி நேரங்களிலேயே செய்து முடிக்கும் அளவிற்கு நவீன தொழில் நுட்பங்கள் வளர்ந்து கொண்டு தானிருக்கிறது. 

இதயத்திற்கு இதமான சிகிச்சை தரும் விஞ்ஞானத்திற்கு நமது இதய பூர்வமான வாழ்த்துக் களை தெரிவிப்போம்!
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings