கபே காபி டே சித்தார்த்தா சிக்குவதற்கான காரணம் !

0
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்களில் மூத்த தலைவரான சிவக்குமார் மீது பல்வேறு ஊழல் குற்றச் சாட்டுகள் உள்ளன. இது தவிர அவர் நடத்தி வரும் பல்வேறு நிறுவனங்களில் வரி ஏய்ப்பு முறைகேடுகள் செய்ததா கவும் குற்றச் சாட்டுகள் இருக்கின்றன. 
கபே காபி டே



கடந்த 2017-ம் ஆண்டு குஜராத் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 44 பேரை அவர் தனது பொறுப்பில் பாதுகாப்பாக வைத்திருந்தார். சோனியாவின் உதவியாளர் அகமது படேலை குஜராத் மாநிலத்தில் இருந்து மேல் -சபைக்கு தேர்வு செய்வதற்காக அந்த 44 எம்.எல்.ஏ. க்களையும் அவர் தனது கட்டுப் பாட்டுக்குள் வைத்து இருந்தார். 

அதனால் தான் குஜராத்தில் இருந்து அகமதுபடேல் வெற்றி பெற முடிந்தது. இதனால் கடும் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்த பா.ஜனதா தலைவர்கள் சிவக்குமாரின் பின்னணி பற்றி தீவிரமாக விசாரித்தனர்.

அதன் பிறகு தான் சிவக்குமாரின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனைகள் மேற்கொண்டனர். 
ஊளை சதையா நீங்கள்? இதை படியுங்கள் !
சிவக்குமாரின் ஆடிட்டர் வீட்டிலும் சோதனை நடந்தது. இந்த சோதனைகளில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் சிலவற்றில் காபிடே அதிபர் சித்தார்த்து க்கும் சிவக்குமாருக் கும் இடையே நடந்த பணபரிமாற்றம் பற்றி தெரிய வந்தது.

எஸ்.எம்.கிருஷ்ணா மூலம் சிவக்குமாரின் நட்பை பெற்று இருந்த சித்தார்த்தா அவரிடமிருந்து பல தடவை பணம் கொடுக்கல்- வாங்கலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தான் சித்தார்த்தா வின் சிக்கல் களுக்கு ஆரம்ப புள்ளியாக கருதப்படுகிறது. 

வருமான வரித்துறையினர் சிவக்குமார் தொடர்பான விசாரணைகள் அனைத்துக்கும் சித்தார்த் தாவையும் அழைத்தனர். ஒரு கட்டத்தில் சிவக்குமார் மோசடிகளுக்கு உடந்தையாக இருந்ததாக சித்தார்த்தை யும் சேர்க்க முயற்சி நடந்ததாக கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக தான் சித்தார்த்தாவின் 20 சதவீத பங்குகளை வருமான வரித்துறை முடக்கியது. வங்கி கணக்குகள், பங்கு பரிவர்த்தனைகள் முடங்கியதால் சித்தார்த்தா வுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக தான் அவர் தற்கொலை முடிவு எடுத்ததாக தெரிய வந்தது.

தற்கொலை செய்து கொண்ட காபி டே அதிபர் சித்தார்த்தா மிக மிக எளிமையானவர். அவர் பல ஆயிரம் கோடிக்கு சொந்தக் காரராக இருந்தாலும் மிக எளிமையாக வாழ்ந்து உள்ளார். ஆடம்பரமாக கூட உடை உடுத்தியது இல்லை. 

தன்னை மிகப்பெரிய கோடீசுவரன் என்று எந்த இடத்திலும் அவர் காட்டி க்கொண்டதே கிடையாது. இன்னும் சொல்லப் போனால் அவர் வெட்கப்படும் சுபாவம் கொண்டவர். 

காபி கிங் என்று அவருக்கு அடைமொழி கொடுக்கப்பட்ட போது கிங் என்றெல்லாம் சொல்லாதீர்கள் என்று வெட்கப்பட்ட தாக சொல்கிறார்கள். அதுபோல பயணங்களின் போதும் உயர்ந்த வகுப்பு பயணத்தை அவர் மேற்கொள்வது இல்லை. 
சித்தார்த்தா



சாதாரண பயணிகளுடன் பயணம் செய்வதையே விரும்பினார். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனது மாவட்ட மக்களை வாழ வைத்த அவர் அதற்காக எந்த பிரதிபலனையும் யாரிடமும் எதிர் பார்த்தது இல்லை. 

ஊழியர்களின் வீட்டு திருமணத்திற்கு சென்றால் கூட வரிசையில் நின்று பரிசு பொருளை கொடுத்து வாழ்த்தி விட்டு வருவார். எந்த இடத்திலும் தன்னை முன்னிலைப் படுத்திக் கொண்டது இல்லை. 

தனது நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் மகப்பேறு விடுப்பு எடுத்தால் அவர்கள் மீண்டும் வேலைக்கு வரும் வரை முழுமையான மாத சம்பளத்தை கொடுக்க உத்தர விட்டு இருந்தார். 

இத்தகைய அவரது குண நலன்கள் தான் இப்போது காபி டே ஊழியர்களிடம் பரபரப்பாக பேசப்படுகிறது. சிக்மகளூரில் அவரது அலுவலக காவலாளி சிவசங்கர் இது பற்றி கூறுகையில், “சித்தார்த்தா சார் வருவதும் தெரியாது. போவதும் தெரியாது. 
அவரை பார்த்ததும் நான் கை கூப்பி வணங்குவேன். அடுத்த வினாடியே அவரும் என்னை பார்த்து கை கூப்பி வணக்கம் தெரிவிப்பார். சிரித்த படியே விசாரித்துக் கொண்டே செல்வார். அவரை போன்று இன்னொரு மனிதரை பார்ப்பது அபூர்வம்” என்றார்.

சித்தார்த்தா வுக்கு சிறப்பு வகுப்பு நடத்திய ஆசிரியர் பிரகாஷ் ஷெட்டி கண்ணீர் மல்க கூறியதாவது:-

சிறு வயதிலேயே எல்லா ஆடம்பர வாழ்வையும் வாழும் வசதியும், வாய்ப்பும் சித்தார்த்தா வுக்கு இருந்தது. ஆனால் அவரிடம் சிறுவயதில் இருந்தே அந்த எண்ணம் இருந்தது இல்லை. சாதாரண பையன் போல வகுப்புக்கு வருவார். மற்ற மாணவர்களிடம் இருந்து வித்தியாசமாக இருப்பார். 

ரொம்ப அமைதியான டைப். பணக்கார பையன் இவ்வளவு பக்குவமாக இருக்கிறாரே என்று நான் பல தடவை ஆச்சரியப் பட்டது உண்டு. என் மீது அவருக்கு மிகுந்த பிரியம் உண்டு. அவருக்கு மட்டுமே நான் பாடம் நடத்தி இருக்கிறேன். 

அப்போது நான் பல தடவை அவரது நடவடிக்கை களை கவனித்து இருக்கிறேன்.  காபி தோட்டத்துக்கு ஊழியர்கள் வந்தால் அவர்களுக்கு தனி மரியாதை கொடுப்பார். அவர்களிடம் அன்போடு பழகுவார். இது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். இவ்வாறு பிரகாஷ் ஷெட்டி கூறினார்.

காபிடே அதிபர் சித்தார்த்தின் தந்தை கங்கையா ஹெக்டே இவருக்கு இப்போது 96 வயதாகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு அவர் குளியல் அறையில் வழுக்கி விழுந்து விட்டார். 

தலையில் பலத்த அடிபட்ட அவருக்கு மைசூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் சுயநினைவு இல்லாமல் இருந்து வருகிறார். 

சித்தார்த்தா தற்கொலை செய்து கொண்டது இதுவரை அவருக்கு தெரியாது. அவர் உடல்நிலை கடந்தசில தினங்களாக முன்னேற்றம் இல்லாமல் உள்ளது. இது சித்தார்த்தா குடும்பத்தினரை மேலும் வேதனையில் மூழ்க செய்துள்ளது.

சித்தார்த்தா மரணத்துக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் கொடுத்த தொல்லையும், நெருக்கடியும் தான் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

குறிப்பாக வருமான வரித்துறையில் டைரக்டர் ஜெனரல் அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரி மிகப்பெரிய தொந்தரவு களை சித்தார்த்தா வுக்கு கொடுத்ததாக தெரிய வந்துள்ளது. இது பற்றி சித்தார்த்தா பல தடவை புகார் அளித்துள்ளார். 
சித்தார்த்தா சிக்குவதற்கான காரணம்



மேலும் தனது தற்கொலை கடிதத்திலும் அந்த அதிகாரி பற்றி சித்தார்த்தா குறிப்பிட்டுள்ளார். இதை யடுத்து அந்த அதிகாரியிடம் மங்களூர் போலீசார் நேற்று தீவிர விசாரணை நடத்தினார்கள்.

இதற்கிடையே பெங்களூரில் வருமான வரித்துறை அதிகாரி களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சித்தார்த்தாவுக்கு அமர்த்யா, இஷான் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களில் அமர்த்யா கொலம்பியா பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ. பட்டம் படித்தவர். 

இவர் கடந்த சில வாரங்களாக தந்தையின் அலுவலகங் களுக்கு வரத்தொடங்கி உள்ளார். எனவே சித்தார்த்தா வின் முக்கிய அலுவலக பொறுப்புகளை இவர் கவனிப்பார் என்று தெரிகிறது. 
அது போல மற்றொரு மகன் இஷானும் அமெரிக்கன் பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ. பட்டம் பயின்றவர். அவர் தனியாக தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

சித்தார்த்தா தற்கொலைக்கு வருமான வரித்துறையின் கெடு பிடியான நடவடிக்கைகள் தான் காரணம் என்று எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன. 

வருமான வரித்துறையினர் வேண்டு மென்றே சித்தார்த்தா மீது வரி தீவிரவாத தாக்குதல் நடத்தியதாக காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித் துள்ளனர். 

எனவே சித்தார்த்தா வுக்கு நெருக்கடி கொடுத்த வருமான வரித்துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். 

இதை யடுத்து வருமான வரித்துறை உயர் அதிகாரி களில் யார்-யார் எல்லாம் சித்தார்த்தாவுடன் பேசினார்கள் என்று விசாரணை தொடங்கி உள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings