10,500 ரெஸ்டாரண்ட்களை நீக்கிய ஸ்விகி, ஜோமேட்டோ - உணவு பாதுகாப்பு !

0
உணவு பாதுகாப்பு மற்றும் தரம் சட்டம், 2006-ன் கீழ் பதிவு செய்யாத ரெஸ்டாரண்ட் களில் இருந்து இ-காமர்ஸ் நிறுவனங்கள் டெலிவரி செய்யக் கூடாது எனச் சுகாதாரத் துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவின் பேரில் இந்த ரெஸ்டாரண்ட்கள் நீக்கப் பட்டுள்ளன.




ஆன்லனை உணவு டெலிவரி நிறுவனங்கள் உணவு பாதுகாப்பு மற்றும் தரம் சட்டம், 2006-ன் கீழ் ரெஸ்டாரண்ட் களைப் பதிவு செய்யவில்லை என்றால் சேவை துண்டிக்கப்படும் என்று ஏற்கனவே அறிவுறுத்திய தாகவும் கூறுகின்றனர்.
ஜோமாட்டோ (2,500), ஸ்விகி (4,000), ஃபுட் பாண்டா (1,800), உபர் ஈட்ஸ் (2,000), ஃபுட் கிளவுட் (200) எனப் பதிவு செய்யாத ரேஸ்டாரண்ட் களைத் தங்களது டெலிவரி பட்டியலில் இருந்து நீக்கியுள்ளன.

மாநில மற்றும் யூனிய பிரதேச உணவு பாதுகாப்பு ஆணையர்கள் ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள் இந்த விதி முறையைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் இல்லை எனில் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித் துள்ளனர்.




ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங் களைக் கண்காணிக்க என்றே சிறப்புக் குழு ஒன்று அமைக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. இதன் கீழ் தொடர்ந்து உணவுகள் ஆய்வு செய்யப்படும் என்றும் கூறப்படு கிறது.
அன்மையில் மதுரை சேர்ந்த ஜோமாட்டோ நிறுவன உணவு டெலிவரி ஊழியர் வாடிக்கை யாளரின் உணவு பொட்டலத்தை யாருக்கும் தெரியாமல் பிரித்துச் சாப்பிட்டு விட்டு அதை மீண்டும் பேக் செய்து டெலிவரி செய்த வீடியோ அனைவரையும் அதிர்ச்சி அடையைச் செய்தது. 
பின்னர் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜோமாட்டோ வருத்த்தம் தெரிவித்ததும் குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings