கல்லூரி மாணவிகளை பார்ட் டைம் ஜாபாக அழைத்து வந்து ஆன்லைன் வழியாக, விபசாரம் செய்து வந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை, மும்பை, டெல்லியில் ஆன்லைன் மூலமாக, விபசார தொழில் நடைபெறுவ தாக, போலீசாரு க்கு கடந்த மாதம் தகவல் கிடைத்தது. இதன் பேரில், தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், நீண்ட தேடலுக்குப் பின்னர், MumbaiHotCollecion.com என்ற பெயரில், ஆன்லைன் விபசாரம் செய்து வந்த 2 பேரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து 2 பெண்களையும் போலீசார் மீட்டனர். GoDaddy.com உதவியுடன், இந்த இணைய தளத்தை ஏற்படுத்தி,
தங்களது மொபைல் எண்ணை அதில் கொடுத்து, விபசார அழகிகளின் புகைப் படங்களையும் பதிவேற்றி, அவர்கள் விபசாரம் செய்து வந்துள்ளனர்.
இதன்படி, வாடிக்கை யாளர்கள், அந்த வெப்சைட்டில் தரப்பட்டுள்ள எண்ணிற்கு, மிஸ்டு கால் கொடுத்தால், உடனே, உங்களது வாட்ஸ் ஆப்பிற்கு ஒரு மெசேஜ் வரும்.
அதன்பேரில், தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி, எங்கே சந்திக்கலாம், எந்த அழகி வேண்டும், எவ்வளவு கட்டணம் என்பது போன்ற விவரங்களை இறுதி செய்து, அழகிகளை சப்ளை செய்வார்கள்.
இதற்காக, போலீசார் தரப்பில், 2 பேரை டம்மியாக நடிக்க வைத்து, இந்த விவரத்தை கண்டறிந்தனர்.
பின்னர், கஃபே பாரடே பகுதியில் உள்ள ராயல் கெஸ்ட் ஹவுசில் ரூம் ஒன்றை புக் செய்த போலீசார்,
அங்கே விபசார அழகிகளுடன் உள்ளே நுழைந்த மாமா வேலை செய்த 2 பேரையும், அந்த பெண்களையும் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
விசாரணையில் அந்த இரண்டு பெண்களுமே கல்லூரி மாணவிகள் என்று தெரிய வந்தது.
பார்ட் டைம் ஜாபாக விபச்சாரத்தில் ஈடுபட்ட தாகவும் ஒரு வாடிக்கை யாளரிடம் சென்று வர ரூ.10 ஆயிரம் வரை கிடைப்ப தாகவும் கூறி அந்த மாணவிகள் அதிர வைத்தனர்.
மும்பை மட்டும் அல்லாமல் சென்னை, கொல்கத்தா, டெல்லியிலும் இந்த கும்பல் கல்லூரி மாணவிகளை ஏமாற்றி பார்ட் டைம் ஜாபாக விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வருவது தெரிய வந்துள்ளது.
பெரும்பாலும் வெளியுர்களில் இருந்து வந்து சென்னை போன்ற நகரங்களில் விடுதியில் மற்றும் உமன் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் மாணவிகளை குறி வைத்து இந்த கும்பல் இயங்கி வந்தது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
Thanks for Your Comments