லாட்டரியில் ஊழியர்கள் 6 பேர் வாங்கிய சீட்டுக்கு ரூ.12 கோடி !

0
கேரளாவில் அரசு சார்பில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப் படுகிறது. பண்டிகை காலங்களில் பம்பர் குலுக்கல்களும் நடத்தப் படுகிறது. ஓணம் பண்டிகையை யொட்டி முதல் பரிசு ரூ.12 கோடி என்ற சிறப்பு லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்பட்டது. 
லாட்டரியில் ரூ.12 கோடி பரிசு




இந்த டிக்கெட்டின் விலை ரூ.300 ஆகும். நேற்று இந்த லாட்டரி சீட்டு குலுக்கல் நடத்தப்பட்டு பரிசு பெற்றவர்கள் விவரமும் அறிவிக்கப் பட்டது.
ரூ.12 கோடி பரிசு என்பதால் அந்த அதிர்ஷ்டசாலி யார்? என்பதை அறியும் ஆவல் அனைவரிடமும் ஏற்பட்டது. தற்போது முதல் பரிசு பெற்றவர்கள் 6 நண்பர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

திருச்சூர் மாவட்டம் கருநாகப் பள்ளியில் உள்ள ஒரு நகை கடையில் ஊழியராக பணிபுரியும் ரோனி, சுபின் தோமஸ், ரெதீஷ், ராஜீவன், ரெதீஷ் குமார், ஜார்ஜ் ஆகிய 6 பேரும் நண்பர்கள் ஆவார்கள்.

இவர்கள் 6 பேரும் ஓணம் பண்டிகைக்காக ஊருக்கு புறப்பட்டு சென்றபோது அந்த பகுதியில் உள்ள சிவன் குட்டி என்ற லாட்டரி விற்பனை யாளரிடம் ரூ.300 கொடுத்து அனைவரும் சேர்ந்து லாட்டரி சீட்டை வாங்கி உள்ளனர். 




அந்த லாட்டரி சீட்டுக்கு தான் முதல் பரிசு கிடைத்துள்ளது. பரிசு தொகை ரூ.12 கோடி என்றாலும் வருமான வரி, ஏஜெண்டு ஊக்கத் தொகை போக பரிசு பணமாக ரூ.7 கோடியே 56 லட்சம் கிடைக்கும்.
பரிசு கிடைத்த மகிழ்ச்சியில் உள்ள அந்த 6 நண்பர்களும் தங்களுக்கு கிடைத்த பரிசு பணத்தில் ஒரு சதவீதத்தை கேரள புற்றுநோய் ஆஸ்பத்திரிக்கு வழங்க போவதாக கூறி உள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings