ரயில் விபத்தில் உயிரை விட்ட உரிமை யாளரின் உடலை விட்டு அவர் வளர்த்த நாய் பிரிய மறுத்த நிகழ்வு பார்த்தோரை நெகிழச் செய்தது.
"பெருசு இப்போதைக்கு எல்லாம் போகாது போல இருக்கே" "அப்படியே போனாக் கூட அடுத்த மாசம் ஒரு கவர்ன்மென்ட் ஹாலிடே வருது,
இல்லாட்டி ஏதாவது ஒரு சண்டேல போச்சுன்னா பரவால்ல" இந்த வார்த்தைகள் எல்லாம் இப்போது நம்மிடையே வெகு சாதாரணமாக நம்மிடையே புழங்க ஆரம்பித்து விட்ட வார்த்தைகள்.
இன்னும் சொல்லப் போனால் நம்மில் சிலர் பயன்படுத்திய அல்லது பயன்படுத்துகிற வார்த்தைகளாக மாறிப்போய் விட்ட வார்த்தைகள்.
இந்த நிலையில் மெக்சிகோ நாட்டில் மனதை நெகிழ வைத்த ஒரு சம்பவம் நடந்துள்ளது. மெக்சிகோ நாட்டில் மாண்டி மொரேலோஸ் என்ற நகரத்தை சேர்ந்தவர் விக்டர் ரெய்னா.
குடி பழக்கத்திற்கு அடிமையான இவர் சில ஆண்டு களுக்கு முன்பிருந்தே நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் மது அருந்திய நிலையில் மாண்டி மொரேலோஸ் ரயில் நிலையத்தில் தண்டவாளம் அருகே நடந்து வந்துள்ளார்.
அப்போது ரெய்னா மது அருந்தி யிருந்ததால் தள்ளாடியபடி வந்துள்ளார். அவருடன் அவர் வளர்த்து வந்த நாயும் வந்துள்ளது.
அப்போது தண்டவாளம் அருகே நடந்து வந்த ரெய்னா தண்ட வாளத்தை கடக்க முயற்சித்த போது வேகமாக வந்த ரயில் ஒன்று இவர் மீது மோதியுள்ளது.
இதில் நிகழ் விடத்திலேயே ரெய்னா உயிர் இழந்துள்ளார். இதைக் கண்ட அந்த நாய் ரெய்னாவின் உடல் அருகேயே இருந்துள்ளது.
விபத்து நடந்த செய்தி குறித்து அறிந்த போலீசாரும் மருத்துவக் குழுவினரும் இறந்து போன ரெய்னாவின் உடலை எடுத்து செல்ல முயன்றனர். அப்போது அந்த நாய் அவரது உடலை பிறர் அணுகவே விடவில்லை.
பின்னர் காவல் துறையினர் மிகவும் சிரமப்பட்டு ரெய்னாவின் உடலை விட்டு பிரித்தனர். உரிமையாளர் இறந்தது தெரிந்தோ தெரியாமலோ தன்னை வளர்த்தவரை விட்டு அந்த நாய் பிரிய மறுத்தது, கண்டவர் அனைவரையும் நெகிழ செய்தது.
Thanks for Your Comments