ஆஸ்திரேலியர் ஒருவர் இங்கிலாந்து மான்செஸ்டர் நகரில் ஒரே ஒரு பீர் குடித்து விட்டு, அதற்கு 48 லட்சம் ரூபாய் பில் கட்டி இருக்கிறார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் எழுத்தாளர் ஒருவர் ஆஷஸ் கிரிக்கெட் தொடரை பற்றி செய்தி சேகரிக்க இங்கிலாந்து சென்று இருக்கிறார்.
ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் நகரில் நடை பெறுகிறது. அந்த தொடரை கண்டுகளித்து, செய்தி சேகரிக்க சென்றுள்ளார் ஆஸ்திரேலியா மூத்த கிரிக்கெட் செய்தியாளர் பீட்டர் லாலோர்.
வலி இல்லாமல் பிரசவிக்க சில வழிகள் !
ஒரு பீர் சாப்பிடலாமா?
தன் விடுதி அறைக்கு செல்லும் முன் ஒரு பாருக்கு சென்று ஒரு பீர் குடிக்க திட்ட மிட்டுள்ளார்.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பீர் ஒன்றை அருந்துவோமே என எண்ணி, அந்த நாட்டில் பிரபலமாக இருக்கும் சரக்கு ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.
160 ரூபாய் மதிப்பு
அந்த பீரின் மார்க்கெட் விலை இந்திய அளவில் 160 ரூபாய் தான் இருக்கும். பார் என்பதால் கொஞ்சம் கூடுதல் விலை வைத்து அதை விற்பார்கள்.
இப்படி நினைத்து தன் வங்கி பணஅட்டையை பார் ஊழியரிடம் கொடுத்துள்ளார் பீட்டர்.
கண்ணாடி அணியவில்லை
அவர் பீர் அருந்தி இருந்ததோடு, கண்ணாடியும் அணிய வில்லை. அதனால், எவ்வளவு பில் தொகை என்பதை பார்க்காமல், வங்கி அட்டை மெஷினில் ஒப்புதல் அளித்துள்ளார்.
அதில் ஏதோ சிக்கல் வர மீண்டும் ஒரு முறை ஒப்புதல் அளித்து இருக்கிறார்.
அடக் கடவுளே
அதன் பின், எவ்வளவு பில் வந்துள்ளது என சாவகசமாக அந்த ஊழியரிடம் கேட்டு இருக்கிறார்.
அப்போது தான் அந்த ஊழியரும் வங்கி அட்டை மெஷினில் வந்த ரசீதை எடுத்து பார்த்துள்ளார். அதைப் பார்த்தவர், அதிர்ச்சி அடைந்து "அடக் கடவுளே!" என கூறி இருக்கிறார்.
பில் தொகை என்ன?
பின்னர் ரசீதை அவரிடம் காட்ட தயக்கம் காட்டி இருக்கிறார். பின்னர், இந்திய மதிப்பில் சுமார் 49 லட்சம் பணம் பெற்றதாக அந்த ரசீதில் இருந்ததை அறிந்து உறைந்து போய் இருக்கிறார் பீட்டர் லாலோர்.
மன்னிப்பு கேட்ட நிர்வாகம்
உடனே அந்த பாரின் மானேஜர் மன்னிப்பு கேட்டுக் கொண்டு என்ன நடந்தது என விசாரித்து பணம் அவர் கணக்கில் இருந்து எடுக்கப் பட்டால் திருப்பி அளிக்கிறோம் என வாக்குறுதி அளித்துள்ளார்.
வங்கியில் இத்தனை பெரிய தொகையை கார்டு மூலம் எடுக்க மாட்டார்கள் என நினைத் துள்ளார் பீட்டர்.
குண்டை தூக்கிப் போட்ட மனைவி
ஆனால், ஆஸ்திரேலியா வில் இருந்து அவர் மனைவி தொலைபேசி யில் குண்டை தூக்கிப் போட்டுள்ளார்.
அவர் வங்கிக் கடன் கணக்கில் இருந்து ஒட்டு மொத்தமாக 49 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டு விட்டது என கூறி இருக்கிறார்.
பத்து நாட்கள் ஆகும்
See this beer? That is the most expensive beer in history.— Peter Lalor (@plalor) September 5, 2019
I paid $99,983.64 for it in the Malmaison Hotel, Manchester the other night.
Seriously.
Contd. pic.twitter.com/Q54SoBB7wu
அதை அடுத்து, அந்த பார் நிறுவனம் அந்த பணத்தை திருப்பி அளிக்க வங்கியிடம் பேசி உள்ளதாக தெரிகிறது.
அந்த அநியாய தொகையை மீண்டும் பெற பத்து வங்கி வேலை நாட்கள் வரை ஆகலாம் என கூறப் பட்டுள்ளது.
அதனால் தற்காலிகமாக நிம்மதி அடைந்துள்ளார் பீட்டர். எனினும், அத்தனை பெரிய தொகைக்கு அவர் பத்து நாட்களுக்கு உரிய வட்டி செலுத்த வேண்டும்.
அதிக விலை பீர் இது தான்
உலகத்திலேயே அதிக விலை கொண்ட பீரை தான் வாங்கியதாக வேதனை யோடு கூறி இருக்கிறார் பீட்டர். மேலும், அது நல்ல பீர் தான்.
ஆனால், உலகில் எந்த பீரும் 49 லட்சம் ரூபாய் அளவுக்கு வொர்த் இல்லை என்றும் கூறி இருக்கிறார். குடிமகன்களே.. இனிமே பீர் குடிச்சுட்டு கண்ணாடி போடாம பில் கட்டாதீங்க!
Thanks for Your Comments