தங்கம் விலை உயர்வை கொண்டாடிய நகைக்கடை ஊழியர்கள் !

0
பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட மந்தநிலை, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்க ளால் இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 
தங்கம் விலை உயர்வை கொண்டாடிய ஊழியர்கள்




குறிப்பாக ஒரு மாத இடைவெளி யில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2 ஆயிரத்துக்கு மேல் அதிகரித்து இருக்கிறது. இடையில் அவ்வப்போது சற்று விலை குறைந்து இருந்தாலும், மறு நாளிலேயே ராக்கெட் வேகத்தில் உயர்ந்து விடுகிறது.

இதன் காரணமாக நகை கடைகளில் கூட்ட மின்றி வெறிச்சோடி காணப்படுவதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவிய வண்ணம் உள்ளன. 
அந்த வகையில், டெல்லியில் உள்ள நகைக்கடை ஒன்றில் வாடிக்கை யாளர்கள் யாரும் வராததால் ஊழியர்கள் உற்சாகமாக நடனமாடு வதாக குறிப்பிட்டு, வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அதன் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்ததில் அது போலி என கண்டறியப் பட்டுள்ளது. அந்த வீடியோ டெல்லியில் உள்ள பிரபல நகைக் கடையில் கடந்த வருடம் எடுக்கப் பட்டது என தெரிய வந்துள்ளது. 
தங்கம் விலை உயர்வு




தினமும் பாடல் பாடி, நடனம் ஆடி வேலையை தொடங்குவதை வழக்கமாக கொண்டு, அதனை தினமும் கடைபிடித்து வருகின்றனர்.

இதுபோன்று சமூக வலைத் தளங்களில் வைரலாகும் வீடியோக்களை நம்பி, அவற்றை பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பதே நல்லது. 

ஒருவேளை பகிர நினைப்போர் அவற்றின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்து, பின் அவற்றை பகிர்ந்து கொள்வது வீண் குழப்பத்தை தவிர்க்க உதவும்.
போலி செய்திக ளால் பலர் பாதிக்கப் பட்டுள்ளனர். சிலர் போலி செய்தியின் பாதிப்பால் உயிரிழந்த சம்பவங்களும் அரங்கேறி யிருக்கிறது. 

சமூக வலைத்தளத்தில் ஒரு தகவலை பகிர்ந்து கொள்ளும் முன் அதன் உண்மைத் தன்மையை அறிந்து கொள்வது வீண் பதற்றத்தை தவிர்க்க உதவும்.




Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings