நீங்கள் காது குடைய BUDS பயன்படுத்தினால் உங்களுக்கு ஓர் எச்சரிக்கை !

0
நமது காதின் குழாய் பகுதியில் செல்கள் உள்ளன. அவை செருமனை உருவாக்குகின்றன. இது பொதுவாக காது அழுக்கு என அழைக்கிறோம். ஒரு சிலருக்கு அதிகப்படியாக சுரக்கிறது. 
நீங்கள் காது குடைய BUDS பயன்படுத்தினால் உங்களுக்கு ஓர் எச்சரிக்கை !
இதனால் காது அடைப்பு ஏற்படுவதால், Buds, முடி ஊசி, பேனாக்கள், பென்சில்கள், வைக்கோல் போன்றப் பொருள்களைப் பயன்படுத்து கின்றனர். இதனால் நமக்கு நல்லதை விட அதிக தீங்கு தான் ஏற்படுகின்றன.

காதுப்பகுதி மிகவும் மிருதுவானது, அழுக்கை எடுக்கும் வகையில் மென்மை யான அழுத்தத்தைக் கொடுத்தாலே செல்கள் சிதையும் மற்றும் ஆபத்து அதிகம் வரும். 
மேலே, சொன்ன பொருள்களைப் பயன் படுத்துவதால், காதில் வலி அதிகம் ஏற்படும் மற்றும் காதுகளி லிருந்து திரவம் வடிதல் (சீழ் வடிதல்) போன்றவைக் காணப்படும். 
இவை சிலருக்கு சிறிது நேரத்தில் சரியாகலாம், சிலருக்கு செவித்திறன் இழக்க நேரிடலாம். நாம் சுத்தம் செய்யக் கவலைப்பட வேண்டாம். 

இவ்வளவு ஆபத்து என்றால் காது எவ்வாறு சுத்தம் செய்வது? 

நாம் தலைக்கு குளிக்கும் போதும், அதாவது தலை ஈரமா இருக்கும் போது காது பகுதியில் உள்ள அழுக்கு தானாக வெளியில் வரும், அல்லது அந்த ஈரமா சந்தர்பங்களில் ஒரு தூணியால் துடைத்தாலே போதும்.
நீங்கள் காது குடைய BUDS பயன்படுத்தினால் உங்களுக்கு ஓர் எச்சரிக்கை !
சில நேரங்களில் காதில் உள்ள அழுக்கு உறங்கும் நேரத்தில் நம் அசை வினாலும் வெளி வந்து விடும். ஒரு சிலருக்கு அழுக்கு அதிகமாக சுரக்கும் அதனால் இந்த இரு வழிகளிலும் அவர்களுக்கு பயன் அளிக்காது. 

அந்த சமயத்தில் கட்டாயமாக மருத்துவரை அணுகி பயன் பெறலாம். மருத்துவர் தண்ணீரில் சிறிது பெராக்சைடு கலந்து காதுக்குள் செலுத்தும் போது எளிதில் அந்த அழுக்கு வெளி வந்திடும்.
சிலருக்கு அடிக்கடி மருத்துவரை சந்திக்கும் சூழல் ஏற்படு மானால் அவர்கள் மருத்துவரிடம் வீட்டிலேயே பயன் பெற வழி கேட்கலாம். 

மருத்துவர் கொடுக்கும் நல்ல ஆலோசனையை கடைப் பிடுத்தால் நாம் நலமுடன் வாழலாம்…
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings