முதியவரை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து கொலை செய்த வேலையாள் !

0
டெல்லியில் ஓய்வு பெற்ற அரசு ஊழியரை அவரது உதவியாளரே கொலை செய்து ஃபிரிட்ஜில் அடைத்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
ஊழியரை கொலை செய்து ஃபிரிட்ஜில் அடைத்த உதவியாளர்
ஓய்வு பெற்ற அரசு ஊழியரை கொலை செய்து ஃபிரிட்ஜில் அடைத்த உதவியாளர்... தலைநகரில் பரபரப்பு! டெல்லியைச் சேர்ந்தவர் 91 வயதான கிருஷ்ணா கோஷ்லா. ஓய்வு பெற்ற அரசு ஊழியரான இவர் தனது மனைவி சரோஜ் கோஷ்லா வுடன் தெற்கு டெல்லியில் உள்ள ஒரு குடியிருப்பில் வசித்து வந்தார்.
தமிழக எம்.பிக்களின் குரல் எடுபடுமா? மக்கள் எதிர்பார்ப்பு !
கடந்த சனிக்கிழமை கோஷ்லாவும் அவரது உதவியாளர் கிஷானும் காணாமல் போயினர். அதோடு கோஷ்லாவின் வீட்டில் இருந்த 3 லட்சம் ரூபாய் பணம் மற்றும் குளிர்சாதன பெட்டியும் காணாமல் போயிருந்தன.

அக்கம் பக்கத்தில் தனது கணவரைத் தேடியுள்ளார் சரோஜ் கோஷ்லா. ஒன்றும் புரியாத நிலையில் டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

உதவியாளர் கிஷான் மீது சந்தேகம் அடைந்த போலீஸார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி சோதித்தனர். 

அதில் கிஷானும் அவரது நண்பர்களும் வீட்டி லிருந்த குளிர் சாதனப் பெட்டியை டெம்போவில் ஏற்றிச் சென்றது பதிவாகி யிருந்தது

செல்போன் சிக்னல்கள் மூலம் கிஷானை போலீசார் பின் தொடர்ந்த போது டெல்லியில் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் அவர் இருப்பது தெரிய வந்தது. 

அங்கு போலீசார் தேடிய போது நண்பர் வீட்டில் கிஷான் பதுங்கி யிருந்தார். அவரையும் நண்பர்களை யும் போலீசார் பிடித்து விசாரித்தனர்.
முதியவர் எங்கே என போலீசார் கேட்ட போது வீட்டில் இருந்த குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து காட்டியுள்ளனர். 

அதற்குள் கோஷ்லா மூச்சு பேச்சு இல்லாத நிலையில் கிடந்தைக் கண்டு டெல்லி போலீஸார் அதிர்ச்சி யடைந்தனர்.
பள்ளியிலேயே தகாத உறவு.. ஆசிரியருக்கு தர்ம அடி !
மேலும் வீட்டின் பின்புறத்தில் 6 அடி ஆழத்திற்கு ஒரு குழியும் தோண்டப் பட்டிருந்ததால் போலீசார் எச்சரிக்கை அடைந்தனர். அவர்கள் அனைவரையும் கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். 

விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கோஷ்லா தம்பதியின் பிள்ளைகள் குடும்பத்துடன் அமெரிக்கா வில் வசித்து வருகின்றனர். 

வருமானத்துக்குப் பஞ்சமில்லாத நிலையில் டெல்லியில் வசிக்கும் கிருஷ்ணா கோஷ்லா தம்பதியை கவனித்துக் கொள்ள கிஷான் என்பவரைப் பணிக்கு அமர்த்தி யிருந்தனர்.

கடந்த ஒரு வருடமாக கிஷான் உதவியாளராக வேலை செய்து வந்தார். பணியின் போது கிஷான் செய்யும் சிறு சிறு தவறுகளைப் பொறுத்துக் கொள்ள முடியாத முதியவர் கடுமையாக கண்டித்துள்ளார். 

பெரியவரின் தொடர் அர்ச்சனையால், வேலையாள் கிஷான் எரிச்சலைடைந் துள்ளார். 

ஆத்திர மடைந்த கிஷான், கேட்க ஆள் இல்லை என்பதால் முதியவரைக் கொலை செய்து அவரிடம் இருந்த பணத்தையும் கொள்ளை யடிக்க திட்ட மிட்டுள்ளார்.

இது குறித்து தனது நண்பர்களுடன் சேர்ந்து திட்டமிட்ட கிஷான், கடந்த சனிக்கிழமை அன்று முதியவர் கோஷ்லாவுக்கும் அவரது மனைவி சரோஜுக்கும் தேநீரில் மயக்க மருந்தைக் கலந்து கொடுத்துள்ளார். 
கிரேட்டர் கைலாஷ் பகுதி
கண்களில் தொடர்ந்து நீர் வடிவதற்கான காரணங்கள் என்ன?
அவர்கள் மயங்கிய வுடன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கோஷ்லாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். 

பின்னர் வீட்டில் இருந்த 3 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு நண்பர்க ளுடன் தப்பிச் செல்ல முயன்றார். 

அப்போது, கோஷ்லாவின் உடலை என்ன செய்வது என தெரியாமல், வீட்டில் இருந்த குளிர் சாதனப் பெட்டியில் அவரது உடலை அடைத்து அவர்கள் வந்த டெம்போவில் ஏற்றினர்.

வீட்டின் காவலாளிகள் கேட்டதற்கு குளிர்சாதனப் பெட்டி பழுதாகி விட்டது என்று கூறி விட்டு அங்கிருந்து கிளம்பி ஒரு நண்பரின் வீட்டுக்குச் சென்றதாக வாக்கு மூலம் அளித்துள்ளனர்.

போலீசார் சற்று தாமதித்து வந்திருந்தால் வீட்டின் பின்புறத்தில் தோண்டப் பட்டிருந்த குழியில் முதியவரை புதைத் திருப்போம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
கட்டி முடிக்கப்படாத வீட்டுக்கு இன்சூரன்ஸ் தேவையா?
பணியின் போது தன்னைத் திட்டினார் என்ற ஒரே காரணத்திற் காக 91 வயது முதியவரை அவரது உதவியாளரே கொலை செய்த சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings