2003 ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் நாள், சீனாவின் முதலாவது விண்வெளி வீரர் யாங் லீவெய், ஷென்சோ-5 விண்கலத்தில் விண்வெளி பயணம் மேற்கொண்டார்.
சீனாவின் மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளி பயணக் காலம் இதன் மூலம் துவங்கியுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில், ஷென்சோ தொகுதி விண்கலங்கள் மொத்தம் 10 விண்வெளி வீரர்களை விண்வெளியில் ஏற்றிச் சென்றுள்ளன.
விண்கலத்திலிருந்து வெளியேறி பரிசோதனை செய்தல், விண்கலங்களின் இணைப்பு உள்ளிட்ட பல முக்கிய தொழில் நுட்பங்களை சீனா அடுத்தடுத்து கிரகித்துக் கொண்டுள்ளது.
எய்ட்ஸ் என்றால் என்ன?
திட்டப்படி 2020ஆம் ஆண்டளவில் சீனாவின் விண்வெளி நிலையம் கட்டி முடிக்கப்படும்.
10 ஆண்டு களுக்கு முன், சீனாவின் மனிதரை ஏற்றிச் செல்லும் முதலாவது விண்கலம் ஜியூட்சூவான் ஏவு மையத்திலிருந்து வெற்றி கரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
ரஷியா, அமெரிக்கா ஆகிய நாடுகளை அடுத்து மனிதரை ஏற்றிச் செல்லும் விண்வெளி பயணத்தைச் சுதந்திரமாக மேற்கொள்ளும் 3வது நாடாக சீனா மாறியுள்ளது.
அப்போது விண்வெளியில் இருந்த வீரர் யாங் லீவெய், சீனா அமைதி நோக்கிற் காக விண்வெளியைப் பயன்படுத்தி, மனித குலத்துக்கு நன்மை புரியும் என்று உலகத்து க்குத் தெரிவித்தார்.
2008 -ஆம் ஆண்டு செப்டெம்பர் விண்வெளி வீரர் ட்சாய் ட்சிகாங், முதல் முறையாக விண்கலத்தி லிருந்து வெளியேறி விண்வெளியில் நடந்து சென்றார்.
விண்வெளியில் பறக்கும் சீனத் தேசிய கொடி, சீனர்களுக்கு மிக பெரிய பெருமை தரக்கூடிய தாகும்.
2011ஆம் ஆண்டு சீனாவின் முதலாவது இலக்கு விண்கலன் என்ற முறையில் தியன்கொங்-1 விண்ணில் செலுத்தப்பட்டது.
விண்வெளி நிலையத்தை நிறுவும் கனவை சீனா நெருங்கி வருகிறது. இதற்குப் பிந்தைய 2 ஆண்டுகளில் ஆள் இல்லா ஷென்சோ-8,
மனிதரை ஏற்றிச் செல்லும் ஷென்சோ-9 மற்றும் ஷென்சோ-10 ஆகிய விண்கலங்கள் அடுத்தடுத்து விண்ணில் செலுத்தப் பட்டன.
தானியக்க முறையிலும் செயற்கை முறையிலும் விண் கலங்களை இணைக்கும் தொழில் நுட்பம் சோதனை அளவில் வெற்றி பெற்றது.
ஷென்சோ-9 விண்கலம் ஏற்றிச் செல்லும் சீனாவின் முதலாவது விண்வெளி வீராங்கனை லியூ யாங், உலகின் பெரும் கவனத்தை ஈர்த்தார்.
இவ்வாண்டு ஜுன் திங்கள், ஷென்சோ-10 விண்கலம், சீனாவின் மனிதரை ஏற்றிச் செல்லும் செயல்முறை விண்வெளி பயணத்தைத் துவக்கியது.
புதிய பதிவான 15 நாட்கள் நீடிக்கும் பயணத்தில், விண்வெளி வீராங்கனை வாங் யாபிங்,
தியன்கொங்-1 விண்கலனில் ஒளிபரப்பு மூலம் தரையிலுள்ள மாணவர் களுக்குப் பாடம் கற்றுக் கொடுத்தார்.
குறுகிய 10 ஆண்டுகளில் சீனாவின் மனிதரை ஏற்றிச் செல்லும் விண்வெளி பயணத்துறையின் மாபெரும் வளர்ச்சி,
உலக விண்வெளி பயண வரலாற்றில் அற்புதமாகி, ஊடகங்களால் முழுமையாக இருப்பதாகப் போற்றப் படுகிறது.
இந்த காலத்தில் பல்வேறு நாடுகளுடன் விண்வெளி தொழில் நுட்ப ஒத்துழைப்பை சீனா ஆக்கமுடன் மேற்கொண்டு, பல பயன்களைப் பெற்றுள்ளது.
இனி வரும் சில ஆண்டுகளில் சீனாவின் மனிதரை ஏற்றிச் செல்லும் விண்வெளி பயணத்துறை வேகத்துடன் வளர்ந்து வரும்.
Thanks for Your Comments