நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற் காக சந்திராயன் -2 கடந்த ஜூலை மாதம் 22 ம் தேதியன்று விண்ணில் செலுத்தப் பட்டது. பூமியின் சுற்றுவட்ட பாதையை சுற்றி வந்த சந்திராயன்-2 விக்ரம் லேண்டரை நிலவின் தென்துருவ பகுதியில் இறப்பதற் கான பணிகள் தொடங்கப் பட்டன.
அதன்படி, செப்டம்பர் 7 ம் தேதியன்று அதிகாலை விக்ரம் லேண்டரை தரையிறக்க திட்டமிடப் பட்டிருந்தது.
ஆனால், எதிர் பாராத விதமாக விக்ரம் லேண்டர் நிலவில் இருந்து 2.1 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த பொது லேண்டருக்கும், இஸ்ரோவு க்கும் இடையேயான தொடர்பு துண்டிக் கப்பட்டு விட்டது.
இதனால், இஸ்ரோ விஞ்ஞானிகள் விக்ரம் லேண்டருட னான தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கினர். இந்நிலையில், சந்திராயன்-2 ஆர்பிட்டர் அனுப்பிய புகைப்படத்தில் விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் சாய்ந்து கிடப்பது தெரிய வந்தது.
இதனை யடுத்து, இஸ்ரோ விஞ்ஞானிகள் விக்ரம் லேண்டருட னான தொடர்பை பணியில் இறங்கினர். நாசாவும் இஸ்ரோவுடன் கைகோர்த்து தொடர்பை ஏற்படுத்த முயன்றது. இருப்பினும், இவர்களின் முயற்சி கை கொடுக்க வில்லை.
எனவே , இனி லேண்டருடன் தொடர்பு கொள்வது மிகவும் கடினம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்னர்.
விக்ரம் லேண்டர் நிலவில் தரை யிறங்கும் போது மிகுந்த வேகத்துடன் இறக்கப் பட்டதால், அது தரையில் மோதி கவிழ்ந்திருக் கலாம் என்றும் அதன் காரணமாக செயலிழப்பு ஏற்பட்டதாக கருதுவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றன.
விக்ரம் லேண்டருடனான தொடர்பை ஏற்படுத்தும் முயற்சிக்கான கடைசி நாள் இன்று என்றாலும் தொடர்பை ஏற்படுத்துவது கடினமான ஒன்றாக உள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து, செய்தியாளர் களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், நிலவில் விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை மீட்டமைக்க முடிய வில்லை என்றும் இருப்பினும் சந்திரயான்-2 ஆர்பிட்டர் மிகச்சிறப்பான முறையில் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
ஆர்பிட்டரில் மொத்தம் 8 கருவிகள உள்ளன. அவை அனைத்தும் மிகச்சிறப் பாக செயல்பட்டு வருகின்றன. ஆகவே சந்திரயான்-2 ஆர்பிட்டர் திட்ட மிட்டபடி அதன் ஆய்வுகளை மேற்கொள்ளும் என தெரிவித்தார்.
மேலும், இஸ்ரோ அடுத்ததாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டத்தில் கவனம் செலுத்தவுள்ளது.
எங்களின் அடுத்த முன்னுரிமை ககன்யான் பணிகள் தான், என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவி த்துள்ளார்.
Thanks for Your Comments