நாடு முழுவதும் பெருகி வரும் வாகன விபத்துகளை கட்டுப் படுத்துவதற் காக மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது.
அதன் அடிப்படையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டி களுக்கு அபராத தொகை பல மடங்காக உயர்த்தப் பட்டுள்ளது. இந்த புதிய சட்ட திருத்தம் கடந்த 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.
மோட்டார் வாகனச் சட்டத்தின் புதிய திருத்தத்தின் படி, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர் களுக்கு அபராத தொகை ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
குடிபோதை யில் வாகனம் ஓட்டுபவ ர்களுக்கு அபராதம் ரூ.10 ஆயிரமாக வசூலிக்கப்படும். இதே போல் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டு பவருக்கு அபராதத் தொகை ரூ.1,000 ஆக உயர்த்தப் பட்டுள்ளது.
பல மடங்கு உயர்த்தப் பட்ட அபராதத் தொகையால் மக்கள் கடுமையான பாதிப்பு களுக்கு உள்ளாகினர்.
புதிய அபராத விதிமுறை களால் பொது மக்களுக்கு அதிக சுமை ஏற்படும் எனக்கூறி மேற்கு வங்காளம் போன்ற மாநிலங் களில் திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் அமல் படுத்தப் படவில்லை.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள முகர்பா சவுக் பகுதியில் அதிக சுமையை ஏற்றிக் கொண்டு சரக்கு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.
அந்த சரக்கு லாரியை மறித்த போக்குவரத்து போலீசார் அனுமதிக் கப்பட்ட அளவுக்கு அதிகமான சுமையை ஏற்றி வந்ததால் புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் படி சாலை விதிகளை மீறியதாக 2 லட்சத்து 500 ரூபாயை அபராதமாக விதித்தது.
அபராதம் விதிக்கப் பட்டதற்கான ரசீதை லாரி ஓட்டுநரிடம் போக்குவரத்து போலீசார் வழங்கினர்.
புதிய மோட்டார் வாகனச் சட்டம் அறிமுகப் படுத்தப்பட்ட பிறகு சாலை விதிகளை மீறியதாக நாட்டில் விதிக்கப்பட்ட அதிகபட்ச அபராதத் தொகை இதுவாகும் என்பது குறிப்பிடத் தக்கது.
Thanks for Your Comments