டோல்கேட் ரசீதுக்கு பின்னால் இருக்கும் உரிமைகள் தெரியுமா?

0
டோல்கேட்களில் வழங்கப்படும் ரசீதுகளுக்கு பின்னால் இருக்கும் உங்கள் உரிமைகள் என்னென்ன? என தெரிந்தால், இனி அவற்றை நீங்கள் தூக்கி எறிய மாட்டீர்கள்.
டோல்கேட் ரசீதுக்கு பின்னால் உரிமைகள்




இந்தியா முழுவதும் உள்ள தேசிய நெடுஞ் சாலைகளில் சுமார் 500 டோல்கேட்கள் அமைக்கப் பட்டுள்ளன. இங்கு வசூலிக்கப்படும் கட்டணம், வாகன ஓட்டிகளு க்கு பெரும் மன உளைச்சலை கொடுத்து வருகிறது. 

டோல்கேட்களில் கட்டண கொள்ளை அரங்கேற்றப் பட்டு வருவதாகவும், எனவே டோல்கேட்களை மூட வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் வாகன ஓட்டிகளின் கோரிக்கை நிறைவேறுவதாக இல்லை. எனவே வேண்டா வெறுப்பாக கேட்கும் கட்டணத்தை கொடுத்து விட்டு தான் வாகன ஓட்டிகள் நெடுஞ் சாலைகளை பயன்படுத்தி கொண்டுள்ளனர்.
சென்னையில் பேருந்துகளுக்கு தனி பாதை !
இது போதாதென்று சில சமயங்களில் நெடுஞ்சாலை பயணங்கள் மோசமான அனுபவத்தை தந்து விடுகின்றன.

வாகனம் திடீரென பஞ்சர் ஆகிவிட்டாலோ அல்லது பழுதாகி விட்டாலோ என்ன செய்வது? என தெரியாமல் வாகன ஓட்டிகள் விழி பிதுங்கி விடுகின்றனர்.
டோல்கேட் கட்டணம்
இது தவிர திடீரென எரிபொருள் தீர்ந்து விட்டாலும், வாகன ஓட்டிகள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டி யுள்ளது. எனினும் இவை அனைத்திற்கும் மிக எளிமையான தீர்வு ஒன்று உள்ளது.

நீங்கள் டோல்கேட்களில் கட்டணம் செலுத்தி விட்டு பெறும் ரசீதுதான் அதற்கு தீர்வு. ஆம், நெடுஞ்சாலையை பயன் படுத்துவதற்கு மட்டும் நீங்கள் கட்டணம் செலுத்துவ தில்லை.

இது போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால் உங்களுக்கு உதவுவதற்கும் சேர்த்துதான் கட்டணம் செலுத்தி கொண்டுள்ளீர்கள். ஆனால் பெரும்பாலான வாகன ஓட்டிகளுக்கு இந்த விஷயம் தெரிவதில்லை.
டோல்கேட்களில் வழங்கப்படும் கட்டண ரசீது உங்களின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு சொல்லும். இந்த ரசீதின் பின்புறத்தில் தொடர்பு எண் வழங்கப் பட்டிருக்கும்.

உங்களுக்கோ அல்லது உங்களுடன் பயணம் செய்து கொண்டிருப்ப வர்களுக்கோ மருத்துவ உதவி தேவைப் பட்டால், நீங்கள் இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

உங்களிடம் இருந்து தகவல் கிடைத்தால், நீங்கள் இருக்கும் இடத்திற்கு ஆம்புலன்ஸ் உடனடியாக வந்து சேரும்.
டோல்கேட்களில் ரசீது




நெடுஞ் சாலைகளில் பயணத்தை தொடங்கும் முன்பாக பெரும்பாலான வாகன ஓட்டிகள் எரிபொருளை நிரப்பி கொண்டு தான் செல்கின்றனர். இல்லா விட்டால் இடையில் உள்ள ஏதேனும் பெட்ரோல் பங்க்கில் எரிபொருள் நிரப்பி கொள்கின்றனர்.

எனினும் சில சமயங்களில் கவன குறைவு காரணமாகவோ அல்லது தவறான கணக்கீடு காரணமாகவோ எரிபொருள் தீர்ந்து விடுகிறது. அவ்வாறான சமயங்களில் அருகில் பெட்ரோல் பங்க் இருந்து விட்டால் பிரச்னை இல்லை.

ஆனால் பெட்ரோல் பங்க் இல்லா விட்டால் நிலைமை மிகவும் சிக்கலாகி விடும். இருந்த போதும் இந்த பிரச்னையை சரி செய்யவும் நீங்கள் டோல்கேட்டை அணுகலாம்.

பெட்ரோல் அல்லது டீசல் இல்லாமல் உங்கள் வாகனம் நின்று விட்டால், நீங்கள் தகவல் கொடுக்கலாம். உடனே குறிப்பிட்ட அளவு எரிபொருளை உங்களுக்காக கொண்டு வந்து விடுவார்கள்.
இந்த அறிகுறிகள் இருந்தா உங்க கண் பார்வை மங்கலாகப் போகுது !
அதற்கான பணத்தை மட்டும் கொடுத்து உங்கள் பயணத்தை நீங்கள் மேற்கொண்டு தொடரலாம். வாகனம் பஞ்சர் ஆனாலும் அல்லது பழுதானலும் இதே வழிமுறை தான்.

இதற்கென இன்னொரு எண் வழங்கப்பட்டிருக்கும். இந்த எண்ணை தொடர்பு கொண்டால், ஆட்கள் வந்து விடுவார்கள். பஞ்சரோ அல்லது பழுதோ அதை சரி செய்து கொடுத்து விடுவார்கள்.

எனவே இனிமேல் டோல்கேட் கட்டண ரசீதை எக்காரணத்தை கொண்டும் தூக்கி எறிந்து விடாதீர்கள். அவசர கால சூழ்நிலைகளில் அது உங்களுக்கு உதவும்.
டோல்கேட் - Tolgate
மேலே குறிப்பிட்டுள்ள சேவை களுக்கும் சேர்த்துதான் சுங்க சாவடிகளில் கட்டணம் செலுத்தி வருகிறோம் என்ற விஷயம் பெரும்பாலான வாகன ஓட்டிகளுக்கு தெரிவது கிடையாது. 

எனவே டோல் பிளாசாக்கள் பற்றிய இந்த தகவல் பயன் அளிப்பதாக இருந்தால் உங்களுக்கு தெரிந்தவர் களுக்கும், நண்பர்களு க்கும் தெரியப் படுத்துங்கள்.

டோல்கேட்களில் வாகன ஓட்டிகள் சந்தித்து வரும் மற்றொரு முக்கியமான பிரச்னை நெரிசல். சில சமயங்களில் டோல்கேட்களில் கடுமையான நெரிசல் ஏற்படுகிறது.

ஆனால் இந்த பிரச்னைக்கு முடிவு கட்டும் திட்டத்தை மத்திய அரசு விரைவில் செயல்படுத்த வுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இனி பார்க்கலாம்.
வாகனங்களின் விரைவான போக்கு வரத்திற்காக நாடு முழுவதும் தேசிய நெடுஞ் சாலைகளை மத்திய அரசு அமைத்துள்ளது. இதன் காரணமாக தொலை தூர பயணங்கள் தற்போது மிகவும் எளிதாகி விட்டன.

ஆனால் தேசிய நெடுஞ் சாலைகளில் குறிப்பிட்ட இடைவெளி களில் அமைக்கப் பட்டுள்ள டோல்கேட்களில் கட்டணம் செலுத்தி விட்டு செல்ல சில சமயங்கள் நீண்ட நேரம் ஆகிறது.

வாகன ஓட்டிகள் ரொக்கமாக செலுத்துவதால் டோல்கேட்களில் பண பரிமாற்றத் திற்கு சிறிது நேரம் ஆகிறது.
டோல்கேட்களில் பண பரிமாற்றம்




எனவே அந்த சமயத்தில் மற்ற வாகனங்களும் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகி, டோல்கேட்களில் மிக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விடுகிறது.

இதனை தவிர்ப்பதற் காக பாஸ்டேக் (FASTag) முறையை மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்தது.

அனேகமாக பாஸ்டேக் சிஸ்டம் எப்படி செயல்படுகிறது? என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். இருந்தாலும் ஒரு சின்ன அறிமுகம்.

ஆர்எஃப்ஐடி (RFID - Radio-frequency Identification) சார்ந்த பாஸ்டேக் கார்டு வாகனத்தின் விண்டு ஷீல்டில் ஒட்டப்படும். இதற்கு செல்போன் போல் நீங்கள் முன்னரே ரீசார்ஜ் செய்து வைத்து கொள்ள வேண்டும்.
உங்கள் வாகனம் டோல்கேட்டை கடக்கும் போது அதற்குரிய கட்டணம் இதில் இருந்து கழித்து கொள்ளப்படும். பாஸ்டேக் முறை மூலம் பல்வேறு நன்மைகள் உள்ளன.

கட்டணம் செலுத்து வதற்காக நீங்கள் டோல்கேட்டில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் கிடையாது. சுங்க சாவடிகளில் பாஸ்டேக் பயனாளர் களுக்கு என தனியாக லேன் வழங்கப் பட்டிருக்கும்.

அந்த லேன் மூலம் நீங்கள் சென்று கொண்டே இருக்கலாம். பாஸ்டேக் இல்லாத மற்ற வாகனங்களை போல் கட்டணம் செலுத்த காத்து கொண்டிருக்க வேண்டிய தேவை யில்லை.
பாஸ்டேக் முறை
அத்துடன் பணத்தை ரொக்கமாக கையில் வைத்திருக்க வேண்டிய அவசியமும் கிடையாது. பாஸ்டேக் முறை மூலமாக டோல்கேட்களில் நெரிசல் குறைக்கப்படும்.

எனவே இன்னும் 4 மாதங்களில் அனைத்து வாகனங் களுக்கும் பாஸ்டேக் முறையை மத்திய அரசு கட்டாயம் செய்ய இருப்பதாக கடந்த ஜூலை மாத தொடக்கத்தில் தகவல்கள் வெளியாயின.

என்எச்ஏஐ எனப்படும் இந்திய தேசிய நெடுஞ் சாலைகள் ஆணையத்திற்கு (NHAI-National Highways Authority of India) மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் கடந்த ஜூலை மாதம் கடிதம் ஒன்றை எழுதியிருந்தது.

இதில், இந்தியாவின் அனைத்து நெடுஞ் சாலைகளிலும் உள்ள அனைத்து டோல் லேன்களையும் பாஸ்டேக் லேன்களாக மாற்றம் செய்யும்படி வலியுறுத்தி ருந்ததாக தகவல்கள் வெளியாயின.

இதன்படி தேசிய நெடுஞ் சாலைகளில் வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் எலெக்ட்ரானிக் டோல் கலெக்ஸன் கட்டாய மாக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இதற்கு ஏற்ற வகையில் தேசிய நெடுஞ் சாலைகளை மாற்றம் செய்யும் பணிகள் தற்போது மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த சூழலில், இந்தியாவின் 75 சதவீத தேசிய நெடுஞ் சாலைகளில், இ-டோலிங் (E-tolling) கட்டமைப்பு வசதியை இந்திய தேசிய நெடுஞ் சாலைகள் ஆணையம் ஏற்படுத்தி விட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகி யுள்ளன.
இ-டோலிங் - E-tolling




இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், ''சுமார் 75 சதவீத டோல் பிளாசாக்களில் முழுவதும் இயங்க கூடிய கட்டமைப்பு வசதி (இ-டோலிங்கிற் காக) ஏற்கனவே உள்ளது. 

எஞ்சிய 20-25 சதவீத டோல்கேட்களில் அதனை ஏற்படுத்தும் பணிகளை செய்து வருகிறோம்'' என்றார். இந்த திட்டம் அமலுக்கு வந்தால், டோல்கேட்களில் போக்கு வரத்து நெரிசல் குறையும் என எதிர் பார்க்கப் படுகிறது.
சில சமயங்களில் தேசிய நெடுஞ் சாலைகளில் பயணம் செய்ததன் மூலம் மிச்சம் பிடிக்கப்பட்ட பெரும்பாலான நேரத்தை டோல்கேட்களில் கட்டணம் செலுத்து வதற்காக காத்திருக்கும் போது வாகன ஓட்டிகள் இழந்து விடுகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.

அவர்களுக்கு இந்த திட்டம் பயன் அளிக்க கூடியதாக இருக்கலாம். ஆனால் சில சமயங்களில் சுங்க சாவடிகளில் உள்ள பாஸ்டேக் லேன்களிலும் கூட போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். எனவே இதனையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. 
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings